Blogger news

adharva school

வெள்ளி, 27 செப்டம்பர், 2013

அட்டகாசமான புதிய BMW i8கார்

அட்டகாசமான புதிய BMW i8கார்

இப்போது விரைவில் புதிய BMW i8கார் அறிமுகமாக உள்ளது இதன் விலை 1.5 கோடி இதன் அட்டகாசமான வடிவமைப்பு அனைவரையும் கவரும் வித்ததில் அட்டகாசமாக உள்ளது இதன் படங்கள் உங்களுக்காக

இதன் விவரங்கள் 

தயாரிப்பு நிறுவனம் BMW
வேறு பெயர் BMW காந்ஸெப்ட் விஷந் எஃபீஶியென்ட் டைநமிக்ஸ்
தயாரிப்புலெயிஸீக்
க்லாஸ்ஸ்போர்ட்ஸ் கார்
கிராண்ட் டூவரரர்
கார் உடல் ஸ்டைல்Coupé
Combustion engine1.5 லிட்டேர், 3 ஸிலின்டர் டர்பு கஸோலைந்
எலெக்ட்ரிக் மோடர்98 க்வ் (131 ஹ்ப்)
பாட்டரி7.2 kWh lithium-ion பாட்டரி
ரேன்ஜ்500 km (310 மீ) Comfort mode
600 km (370 மீ) Eco Pro mode
எலெக்ட்ரிக் ரேன்ஜ்35 km (22 மீ)
வீல்‌பேஸ்2,800 mm (110 in)
லென்த்4,700 mm (190 in)
விட்த்1,940 mm (76 in)
ஹைட்1,300 mm (51 in)
Curb weight1,500 கீலொக்ர்யாம்ஸ் (3,300 மிஸ்டர்)
ரிலேடெட்BMW i3
டிஸைநர்
மாரியோ Majdandzič (Vision EfficientDynamics)
பெநாய்ட் ஜேகப் (Production i8)
ரிச்சர்ட் கிம் (2011 BMW i8 Concept)


இதன் அட்டகாசமான படங்கள்











இதன் வீடியோ



ஞாயிறு, 22 செப்டம்பர், 2013

6 திரை விமர்சனம் பாக்கவேண்டிய படம்

ஷாம்- பூனம் தம்பதியர் தங்களின் ஒரே மகனின் 6-வது பிறந்த நாளை கொண்டாடி விட்டு கடற்கரைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கு மகனை தவற விடுகிறார்கள். தொலைந்து போன மகனை தேடி அலைகிறார்கள். கிடைக்காத சூழ்நிலையில் காவல் துறையில் தகவல் தெரிவிக்கிறார்கள்.

காவல்துறையினர் இரண்டு நாட்களாக தேடியும் கிடைக்காததால், குழந்தைகளை கடத்தும் கும்பல்களிடம் அழைத்துச் செல்லும்படி ஒரு கான்ஸ்டபிளிடம் சொல்லி அனுப்பி வைக்கிறார் காவல்துறை ஆய்வாளர். அங்கு சென்று விசாரித்தபோது ஷாமின் மகனை கடத்தல் கும்பல் கடத்தியிருப்பது தெரிய வருகிறது. இதற்கு போலீஸ் எந்த உதவியும் செய்ய முடியாத சூழலில் தன் மகனைத் தேடி ஷாமே அலைகிறார்.

குழந்தையை மாநிலம் மாநிலமாக மாற்றி மாற்றி கொண்டு செல்கிறது கடத்தல் கும்பல். அந்த கும்பலில் உள்ள ஒவ்வொருவரையும் பிடித்து பின்தொடர்கிறார் ஷாம். கடைசியில் தன் மகனை கண்டுபிடித்து வீட்டுக்கு அழைத்து வந்தாரா? என்பது மீதிக்கதை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு முழுப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார் ஷாம். இந்த படத்திற்காக பல்வேறு தோற்றங்களில் தோன்றுகிறார். இதற்காக இவர் கடினமாக உழைத்திருப்பது ஒவ்வொரு காட்சிகளிலும் தெரிகிறது. மகனை இழந்த தந்தை படும் வேதனைகளை தன் நடிப்பால் கண்முன் நிறுத்தியிருக்கிறார் ஷாம்.

மகனை இழந்து தாய் படும் வேதனையையும், வலியையும் தன் நடிப்பால் சிறப்பாக வெளிப்படுத்திருக்கிறார் பூனம். குறிப்பாக தன் மகனை தன்னிடம் ஒப்படைக்கும்படி ஒரு பிச்சைக்காரன் காலைப் பிடித்து கெஞ்சும் காட்சி திரையரங்குகளில் உள்ளவர்களின் கண்களை கலங்க வைக்கிறது.

ஸ்ரீகாந்த் தேவாவின் இசையில் பாடல்கள் கேட்கும் படியாக உள்ளது. பின்னணி இசையில் மிரட்டியிருக்கிறார் ஸ்ரீகாந்த் தேவா. கமர்ஷியல் படங்களுக்கு மட்டுமல்ல, இப்படிபட்ட படங்களுக்கும் இசையமைக்க தெரியும் என நிரூபித்திருக்கிறார்.

கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு மேலும் ஒரு பலம்.

கதை, திரைக்கதை, பாடல்கள் எழுதி இயக்கியிருக்கிறார் வி.இசட். துரை. வித்தியாசமான கதைக் களத்தோடு ஷாமோடு இணைந்திருக்கிறார். இந்த படத்திற்காக நீண்ட நாட்கள் உழைத்திருப்பது தெரிகிறது. தன் மகனுக்காக தன் வாழ்கையையே தொலைக்கும் தந்தை, நல்ல மனிதனுக்கு தவறு செய்துவிட்டோமே என்று வருந்தி கடைசி வரை கூடவே இருந்து உயிரை விடும் டிரைவர் என படம் முழுக்க அழுத்தமான கதாபாத்திரங்களை அருமையாக கையாண்டிருக்கும் இயக்குனருக்கு ஒரு சபாஷ். மொத்தத்தில் மெழுகுவர்த்தி நின்று எரியும்.




வியாழன், 19 செப்டம்பர், 2013

மனிதனின் பூர்விகம் பூமி இல்லை

பூமியிலுள்ள மனிதர்கள் எல்லோருக்கும் செவ்வாய் கிரகம்தான் பூர்விகம் என்று ஆய்வறிக்கை ஒன்றில் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
ஃப்ளோரன்ஸில் நடைபெறும் 23-வது கோல்டுஷ்மித் கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில், உயிர்களின் தொடக்கத்துக்கு மூலகாரணமான "மாலிப்டினம்' என்ற ஆக்ஸிஜன் நிரம்பிய கனிமம், செவ்வாய் கிரகத்தில் மட்டுமே இருப்பதாகவும், புவிப்பரப்பில் அவை கிடையாது என்பதால் உயிர்கள் தோன்றியது செவ்வாய் கிரகத்தில்தான் என்று கூறப்பட்டுள்ளது.
 
இந்த ஆய்வில் பங்கேற்ற அமெரிக்க விஞ்ஞானி ஸ்டீவன் பென்னர் கூறியதாவது:
 
மாலிப்டினத்தில் அதிக அளவில் ஆக்ஸிஜனேற்றம் நிகழ்ந்ததுதான் உயிரினங்கள் உருவாவதன் தொடக்கமாக இருந்தது. இந்த மாலிப்டினம் பூமியில் உயிர்கள் தோன்றிய காலத்தில் இருந்திருக்கவே முடியாது. காரணம், 300 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் மிகக் குறைவான அளவே ஆக்ஸிஜன் இருந்தது. ஆனால் அதே நேரம்
 
செவ்வாய் கிரகத்தில் போதுமான அளவு ஆக்ஸிஜன் இருந்தது.
 
செவ்வாய் கிரகத்திலிருந்து பூமியில் வந்து மோதிய விண்கல்லால்தான் பூமியில் உயிர்கள் தோன்றியிருக்க முடியும் என்ற தத்துவத்துக்கு இந்த ஆதாரம் வலு சேர்ப்பதாக உள்ளது. உயிரிகள் உருவாக செவ்வாய்தான் பொருத்தமான கிரகம் என்றாலும், அவை பரிணாம வளர்ச்சியடைவதற்கு பூமி ஏற்ற கிரகமாக இருந்தது.
 
இந்த ஆதாரங்களிலிருந்து நாமெல்லோரும் செவ்வாய் கிரகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெளிவாகிறது. அங்கு உருவாகி, ஒரு பாறை மூலமாக பூமிக்கு வந்த உயிரிகளின் வழித்தோன்றல்கள்தாம் நாம். நல்லவேளை, நாமும் நமது மூதாதையர்கள் போல் செவ்வாய் கிரகத்திலேயே தங்கியிருந்தால், இப்படி உட்கார்ந்து இதைப்பற்றி பேசிக் கொண்டிருந்திருக்க மாட்டோம்
 

திங்கள், 16 செப்டம்பர், 2013

ஜாலியா சிரிக்கலாமே

 ஜாலியா சிரிக்கலாமே 


வாடிக்கையாளர் : மெதுவடைக்கும், வடைகறிக்கும் என்னப்பா வித்தியாசம்? 
சர்வர் : ஒரு நாள் வித்தியாசம் தான் சார்.
 
 
அதென்னப்பா, ‘தங்க’ சாம்பார்... 
வாடிக்கையாளர் : போர்டுல எழுதியிருக்கே கோல்டு சாம்பார்... அது என்னப்பா? 
சர்வர் : அதுவா சார், சாம்பார்ல 24 கேரட் போட்டு தயார் பண்ணிருக்கோம்...
 
 
 
அப்பா : ஏண்டா... உன் நோட்டுல வீட்டு மளிகைகணக்கு, லாண்டரி கணக்கு எல்லாம் எழுதி வச்சுருக்க...?   
 மகன் : எங்க வாத்தியார்தான் வீட்டுக் கணக்கை எழுதி வரச் சொன்னாருப்பா.
ஆசிரியர் : நீ எதிர்காலத்துல என்னவாக ஆசைப் படுற... 
மாணவன் : டாக்டர் இல்லாட்டி பைலட் ஆகணும் சார்... 
ஆசிரியர் : எப்படியோ மக்கள மேல அனுப்பிடணும்கறதுல உறுதியா இருக்க...
 

மாயப் பாட்டியின் முத்துமாலை-எகிப்திய கதைகள்

நெடுங்காலத்துக்கு முன் எகிப்தில் ஷகானா என்னும் இளவரசி இருந்தாள். ஒரு நாள் அவள் தன் தோழிகளுடன் அரண்மனைக்குப் பக்கத்தில் உள்ள நீரூற்றில் குளிக்கச் சென்றாள்.குளித்து முடித்துவிட்டு ஷகானா கரையேறினாள். அப்போது ஒரு பாட்டி நீரூற்றின் கரையில் நின்றுகொண்டு இருந்தாள்.
 
'ஏய் கிழவி, உனக்கு இங்கே என்ன வேலை? இது எங்களைப் போன்ற அழகான இளவரசிகள் குளிப்பதற்கான இடம். சீக்கிரம் இங்கே இருந்து போய்விடு'' என்று இளவரசி கோபத்துடன் சொன்னாள்.அதைக் கேட்டு அந்தப் பாட்டி சிரித்தவாறு அருகே வந்தாள். 'அழகான இளவரசியே, இப்போது இருப்பதைவிட நீ இன்னும் அழகாக ஆக வேண்டுமா? அப்படி என்றால் இந்த மந்திர முத்துமாலையை அணிந்துகொள்'' என்று ஷகானாவிடம் ஒரு முத்துமாலையைக் கொடுத்தாள்.
 
'இவ்வளவு அழகான முத்துமாலையை நான் இதுவரை பார்த்ததே இல்லை'' என்று சொன்ன ஷகானா, அதைக் கழுத்தில் அணிந்துகொண்டாள்.
 
அடுத்த நொடி ஷகானாவின் கையும் காலும் குறுகிச் சுருங்கின. அவள் மிகவும் வயதான முதியவள் ஆகிவிட்டாள். இந்தக் காட்சியைக் கண்ட இளவரசியின் தோழிகள் பொங்கி அழுதார்கள். அவர்கள்  இளவரசியை அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்கள்.
 
விவரம் அறிந்த ராஜா கோபமானார். 'என் மகளை ஏமாற்றி இந்த நிலைக்கு ஆளாக்கிய அந்தக் கிழவியைச் சீக்கிரம் பிடித்து சிறையில் அடையுங்கள்'' என்று கட்டளையிட்டார்.பாட்டியைப் பிடிப்பதற்காகத் தளபதி சில வீரர்களுடன் நீரூற்றுக்கு வந்தான். அப்போது அந்தப் பாட்டி மெதுவாக வானில் பறந்து செல்வதைப் பார்த்தான்.
 
ராஜாவிடம் விரைந்து சென்ற தளபதி 'ராஜாவே, அந்தக் கிழவி ஏதோ பெரிய சூனியக்காரிபோல இருக்கிறது. அவளைப் பிடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல'' என்றான்.'அந்தச் சூனியக்காரியைக் கண்டுபிடித்து என் மகளை முன்பு இருந்ததுபோல மாற்றுபவர்களுக்கு நான் ஆயிரம் தங்க நாணயங்கள் தருவதாக விளம்பரம் செய்யுங்கள்'' என்றார் ராஜா.
 
அப்படியே விளம்பரம் செய்யப்பட்டது. செய்தி அறிந்த பலரும் அந்தச் சூனியக்காரியைத் தேடி அலைந்தார்கள். ஆனால், எவராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்போதுதான் வெளிநாட்டில் வசிக்கும் ஷாகித் என்ற இளைஞன் அந்தத் தகவலை அறிந்தான். ஷாகித் அன்றே சூனியக்காரியைத் தேடிப் புறப்பட்டான்.  அவனுக்கு அதிர்ஷ்டமும் இருந்தது. அவன் நீரூற்றை நெருங்கியபோது பாட்டி அங்கே இருப்பதைப் பார்த்தான் பாட்டி ஒரு பாறையில் சாய்ந்து தூங்கிக்கொண்டு இருந்தாள். பக்கத்தில் இருந்த மூட்டையில் முத்துமாலையும் இருந்தது.
 
இப்படிப்பட்ட ஒரு முத்துமாலைதான் இளவரசியைக் கிழவியாக மாற்றி இருக்கும். நான் இந்த மாலையை அணிந்து ஒரு கிழவன் ஆகிறேன் என்று நினைத்தான் ஷாகித். நொடிப் பொழுதில் அந்த மாலையை எடுத்து அணிந்துகொண்டு கிழவன் ஆகிவிட்டான்.
அப்போது பாட்டி கண் விழித்தாள். முத்துமாலையையும் இளைஞனையும் பார்த்து 'நீ ஏன் இந்த மாலை அணிந்து கிழவன் ஆனாய்?'' என்று கேட்டாள்.
 
ஷாகித் தந்திரமாகப் பேசினான் 'மன்னிக்க வேண்டும். நான் ஒரு ஏழை. எனக்கென்று யாரும் இல்லை. எனவே மிகவும் சீக்கிரம் இறந்துவிட விரும்புகிறேன். கிழவன் ஆகிவிட்டால் சீக்கிரம் இறந்துவிடலாம் என்று முத்துமாலையை அணிந்துகொண்டேன். ஆனால் இப்போது நான் செய்தது தவறு என்று புரிகிறது'' என்று சொல்லி போலியாக அழுதான்.
 
பாட்டிக்கு அவன் மீது இரக்கம் ஏற்பட்டது. 'தம்பி வருத்தப்படாதே. உனக்கு நான் உதவி செய்கிறேன்'' என்று சொல்லி வேறு ஒரு முத்துமாலையைக் கொடுத்தாள். அவன் அதை அணிந்ததும் முன்பு இருந்ததுபோன்று இளைஞனாக மாறினான். பிறகு பாட்டிக்கு நன்றி சொல்லி புறப்பட முற்பட்டான்.
 
அப்போது பாட்டி 'நீ இப்போது எங்கே செல்கிறாய் என்று எனக்குத் தெரியும். ஆனால், இளவரசியின் கழுத்தில் இந்த முத்துமாலையை அணிவிப்பதற்கு முன்பு அவளுக்குச் சாட்டையால் பத்து அடி கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் அவள் பழைய உருவத்தைப் பெறுவாள்'' என்றாள்.
 
அரண்மனையை அடைந்த ஷாகித் 'ராஜாவே, எனக்கு அனுமதி கொடுங்கள். உங்கள் மகளை முன்பு இருந்தது போன்று அழகி ஆக்குகிறேன்'' என்று ராஜாவிடம் சொன்னான்.ராஜா உடனடியாக அவனைத் தன் மகளிடம் அழைத்துச் சென்றான். ஷாகித் தன் கையில் இருந்த சாட்டையால் இளவரசியை அடிக்கத் தொடங்கினான். பாவம் இளவரசி! வேதனை தாளாமல் துடித்தாள்.
 
மகள் படும் துன்பத்தைப் பார்த்து மனம் கலங்கிக் கண்ணீர் வடித்தார் ராஜா. அடிபட்ட இளவரசி மயங்கி விழுந்தாள். அந்த நேரத்தில் ஷாகித், பாட்டி கொடுத்த முத்துமாலையை இளவரசியின் கழுத்தில் அணிவித்தான். அடுத்த நொடியே அவள் பேரழகியாக எழுந்தாள்.
 
ராஜா மகிழ்ந்தார். 'இளைஞனே, நீ அந்த சூனியக்காரியையும் பிடித்துக்கொண்டு வந்தால்  உனக்கு ஆயிரம் தங்க நாணயங்கள் பரிசளிக்கிறேன்'' என்றார்.அப்போது இளவரசி முன்னால் வந்து 'வேண்டாம் அப்பா. என் ஆணவப் பேச்சுதான் ஆபத்தில் சிக்க வைத்தது. அந்தப் பாட்டிக்குத் தண்டனை கொடுக்க வேண்டாம். என்னைக் காப்பாற்றிய இவருக்கு உடனே பரிசு கொடுக்க வேண்டும். அதோடு, இவரையே நான் திருமணம் செய்துகொள்ளவும்  விரும்புகிறேன்'' என்று சொன்னாள்.
 
அவள் விருப்பத்துக்கு ராஜாவும் சம்மதம் தெரிவித்தார். ஷகானா மற்றும் ஷாகித்தின் திருமணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

வியாழன், 12 செப்டம்பர், 2013

இது தான் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வது ஜூலியா சிந்திக்கவும்

ஒரு வங்கியில் கொள்ளை அடிக்கும் பொழுது கொள்ளைக்காரன் " யாரும் நகராதீர்கள், பணம் நாட்டினுடையது, உங்கள் உயிர் உங்களுடையது "
என்றான்..
எனவே அனைவரும் அமைதியாக இருந்தனர், இது தான் "மனம் மாற்றும் கருத்து ".
ஒரு பெண் கொள்ளைக்காரன் கண்டு பயந்தால் "நங்கள் கற்பழிக்க வரவில்லை கொள்ளையடிக்க வந்திருக்கிறோம்,என்றான். இது தான் "தொழில் முறை யுக்தி",
கவனம் சிதறாமல் இருப்பதற்கு.
கொள்ளையடித்து விட்டு வீட்டுக்கு திரும்பும்
போது ஒருத்தன் கேட்டான் "எவ்வளவு பணம் இருக்குது னு எண்ணுவோம்". இன்னொருவன் " அட முட்டாளே, டிவி'ல
நியூஸ் போடுவாங்க அதுல பாத்துக்கலாம்" என்றான்.
இது தான் "அனுபவம்" என்பது,
திறமைகளை விட பெரியது.
அவர்கள் கொள்ளை அடித்து சென்ற பிறகு வங்கி மேலாளர், ஊழியரிடம் காவல்துறைக்கு தெரியப்படுத்துங்கள்
என்றார், ஆனால் அவன் "நாம ஒரு 10 கோடி எடுத்துட்டு, மொத்தம் 50 கோடின்னு கணக்கு சொல்லிடலாம்" என்றான்.
இது தான் "அலைகளை நோக்கி நீந்து"என்பது.
அதை கேட்டு மேலாளர் சொன்னார், "மாதா மாதம் கொள்ளை நடந்தால் நல்லா இருக்கும்
" இது தான் "அலுப்பின் வெறுப்பு", வேலையை விட சொந்த சந்தோசம் தான் முக்கியம் இவர்களுக்கு.
மறுநாள் டிவி'யில் 100 கோடி கொள்ளை அடிக்கப்பட்டது என்று செய்தி வந்தது. அந்த கொள்ளைக்காரன் ஆக்ரோஷத்துடன் "நாங்கள் உயிரை பணயம் வைத்து 30
கோடி தான் கொள்ளை அடித்தோம், ஆனால் அவர்கள் 70
கோடி கொள்ளை அடித்துவிட்டனர், கொள்ளை அடித்தவனை விட படித்தவனே மிக கேவலமாக நடந்து கொள்கிறான்"
இதுவே "அறிவு தங்கத்துக்கு நிகரானது" என்று சொல்லப்படுகிறது
அந்த வங்கி மேலாளர் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தார், கொள்ளை சம்பவத்தால் தான் இழந்த பங்கு சந்தையை மீட்டார்.
இது தான் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வது.
இப்பொழுது சொல்லுங்கள், இதில் யாரு உண்மையான கொள்ளைக்காரன் ??

புதன், 11 செப்டம்பர், 2013

ஜாலியா சிரிங்க

ஜாலியா சிரிங்க 

கணவன் மனைவி இருவரும் ஜெருசலேம் ஊருக்கு டூர் போனாங்க.. போன இடத்துல மனைவி இறந்துட்டா...
அங்க இருந்த சர்ச் பாதர் சொன்னார்... 'உங்க மனைவி உடலை இந்தியா கொண்டு போகணும்னா பத்தாயிரம் டாலர் ஆகும்.. இங்கேயே புதைச்சிட வெறும் நூறு டாலர் தான் ஆகும்...'
கணவன் சொன்னான்.. 'நான் இந்தியாவுக்கே கொண்டு போய்டறேன் சார்..'
பாதர் ஷாக் ஆகிட்டார் 'உங்க மனைவி மேல உங்களுக்கு அவ்ளோ பாசமா...' கணவன் சொன்னான்.. 'அதெல்லாம் இல்லை சார்.. இங்க புதைச்ச இயேசு கிறிஸ்த்து மூணு நாளுல உயிரோட எழுந்து வந்துட்டார்.. அதான் பயமா இருக்கு சார்..'

செவ்வாய், 10 செப்டம்பர், 2013

இணையத்தை கலக்கும் கோச்சடையான் டிரைலர்: வீடியோ இணைப்பு

இணையத்தை கலக்கும் கோச்சடையான் டிரைலர்: வீடியோ இணைப்பு


குட்டிக் கதை :கழுதையை அமைச்சராக்கிய மன்னன்

குட்டிக் கதை :கழுதையை அமைச்சராக்கிய மன்னன் 

மன்னன் ஒருவன் வேட்டையாடப் போவதற்கு முன் தனது அமைச்சரை அழைத்து ,''மழை வருமா?''எனக் கேட்டான்.'
 
'வராது''என்றான் அமைச்சன்.
 
வழியிலே ஒரு கழுதை மேல் வந்து கொண்டிருந்த குடியானவன் ஒருவன் கொஞ்ச நேரத்தில் மழை வரும் என எச்சரித்தான்.
 
அதைப் பொருட்படுத்த்தாமல் போன மன்னன் வேட்டை ஆடிக் கொண்டிருந்த போதுகடும் மழை வந்து நன்றாய் நனைந்து போனான்.
 
 
 
திரும்பும் வழியில் குடியானவனைச் சந்தித்து ,''மழை வரும் என்று உனக்கு எப்படித் தெரியும்?''எனக் கேட்டான்.
 
அவனோ,''மன்னா,எனக்குத் தெரியாது.ஆனால் என் கழுதைக்குத் தெரியும்.மழை வரும் முன் அது தன காதுகளை முன்னுக்கு நீட்டிக் கொள்ளும்.''என்றான்.
 
உடனே மன்னன் அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கி விட்டு கழுதையை அமைச்சராக்கினான்.
 
இக்கதையை ஆபிரஹாம் லிங்கன் கூறி விட்டு சொன்னார்,''அதில் தான் மன்னன் ஒரு தவறு செய்து விட்டான்
 
.என்னவெனில் அது முதற்கொண்டு எல்லாக் கழுதைகளும் ஏதாவது பதவி வேண்டும் என அலைகின்றன.''
 

வெள்ளி, 6 செப்டம்பர், 2013

முசொலினி - சுபாஷ் சந்திர போஸ்


உலகத்தையே ஆட்டிப் படைத்த சர்வாதிகாரி முசொலினியிடத்தில்"நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் எப்படிபட்டவர்?" என்று கேட்டார்கள்...
சர்வாதிகாரி முசொலினி சொன்னது:-
இந்தியாவில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் காலந்தவறிப் பிறந்துவிட்டார். சரியான காலத்தில் பிறந்திருந்தால் உலக சரித்திரத்தில் அலெக்சாண்டருக்கும் நெப்போலியனுக்கும் இடம் கிடைத்திருக்காது...!



செவ்வாய், 3 செப்டம்பர், 2013

நோக்கியா நிறுவனத்தை வாங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம்

நோக்கியா நிறுவனத்தை வாங்கும் மைக்ரோசாப்ட் நிறுவனம்

நோக்கியா உலக அளவில் சரிவை சந்தித்து இருப்பதால் அதை விற்கும் முடிவில் உள்ளது நோக்கியவை பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனம்  7.8 பில்லியன் டாலர்கள் செலவில் வாங்கஉள்ளது இது  குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

 நோக்கியா விற்க கரணம் சாம்சுங் மற்றும் ஆப்பிள் நிறுவங்களின் வெற்றியே காரணம்  இதனால் நோக்கியாவின் மொபைல் போன்கள் சரிவை சந்தித்து உள்ளது
இந்தியாவிலும் பல நிறுவனங்கள் போட்டியின் காரணமாக நோக்கியா சரிவை சந்தித்து உள்ளது சைனா மொபைல் போன்கள் வரவால் நோக்கியாவின்  மொபைல் போன்களின் விற்பனை இந்தியாவில் குறைந்தது குறிபிடத்தக்கது.
மேலும் நோக்கியா போன்களின் விலை அதிகமாக உள்ளதும் ஒரு முக்கிய கரணம் எனலாம்