Blogger news

adharva school

வியாழன், 7 பிப்ரவரி, 2013

கருவுறுதலை அதிகரிக்கும் வைட்டமின் டி உணவுகள்!!!

காட் மீன் எண்ணெய் (Cod liver oil):




மீன் எண்ணெயின் வாசனை மற்றும் ருசி நன்றாகவே இருக்காது. இருப்பினும் அதில் வைட்டமின் டி சத்து அதிகமாக உள்ளது. அதுமட்டுமின்றி இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் கூட அதிகம் உள்ளது. அதிலும் ஒரு டேபிள் மீன் எண்ணெயில் உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்துக்களை பெறலாம். ஆனால் எண்ணெயை குடிக்க முடியாது என்பதால், கடைகளில் விற்கப்படும் மீன் எண்ணெய் மாத்திரையை வாங்கி சாப்பிடுவது நல்லது.

சோயா பொருட்கள்




சோயா பொருட்களான டோஃபு மற்றும் சோயா பாலில் வைட்டமின் டி என்னும் சத்து அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது.

காளான்



காளான் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது என்பது தெரியும். ஆனால் அந்த காளானில் வைட்டமின் டி சத்து அதிகமாக இருப்பதோடு, வைட்டமின் பி5 சத்தும் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் காளானை சமைத்து சாப்பிடும் போது முழுமையாக வேக வைக்காமல், அளவாக வேக வைத்து சாப்பிட்டால், பெண்கள் கருவுறுதலை அதிகரிக்கும்.

கடல் சிப்பி



 கடல் உணவுகளில் கடல் சிப்பியும் வைட்டமின் டி சத்து அதிகம் நிறைந்திருக்கும் உணவுகளுள் ஒன்று. அதிலும் இதனை பெண்கள் சாப்பிட்டால், அவர்களது கருவுறுதலை அதிகரிக்கும். அதுமட்டுமின்றி கடல் சிப்பியில் ஜிங்க், செலினியம், மாங்கனீசு மற்றும் காப்பர் போன்றவையும் அதிகம் உள்ளது.


மீன் 



மீன்களில் சாலமன், டூனா மற்றும் கெளுத்தி போன்றவற்றில் வைட்டமின் டி மட்டுமின்றி, ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் கூட உள்ளது.

முட்டை


 முட்டையில் புரோட்டீன் மட்டுமின்றி, வைட்டமின் டி, வைட்டமின் பி12 போன்றவையும் அதிகம் உள்ளது. எனவே தினமும் ஒரு முட்டையை பெண்கள் சாப்பிடுவது நல்லது.
நன்றி :ஒன் இண்டியா


வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

செல்பேசி பற்றிய அறிய தகவல்கள் :SMS பற்றிய வரலாறு

செல் பேசி பற்றிய அறிய தகவல்கள் :


1985ல், 45 வயதுகள் மதிக்கத்தக்க ஆய்வாளரான பிரீதேல்ம் ஹிலெப்ரண்ட் தான் இந்த SMS களுக்கான எழுத்துருக்களின் அளவுகளை நிர்ணயித்தவர்.
ஒவ்வொரு மெசேஜும் குறிப்பிட்ட அளவுடைய எழுத்துக்களை மட்டுமே கொண்டிருக்கவேண்டுமெனவும், (160 உருக்கள்) இல்லாவிட்டால் தொழில்நுட்பரீதியான பிரச்சனைகள் ஏற்படுமெனவும் தனது ஆய்வின்மூலம் விளக்கியவரும் இவரே