Blogger news

adharva school

ஞாயிறு, 23 அக்டோபர், 2011

இந்த படம் நல்ல இருக்கு



நேத்து hbo டிவி ல கிளாஷ் ஆப்   தி டைட்டன்ஸ்ன்னு ஒரு படம் பாத்தேன் தீபாவளி சிறப்பு திரைப்படம்னு போட்டாங்க சரி பாக்கலாம்னு பாத்தேன் படம் அருமையா இருந்தது நம்ம அம்புலி மாமா கதைகள் மாரிதான் மாய உலக கதை கிராபிக்ஸ் அருமையாக இருந்தது படம் முழுக்க பயணம் அதில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் படம் போவதே தெரியாத அளவிற்கு அருமையான திரைக்கதை கொழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையில் அமைத்துள்ளது.

இரண்டு கடவுள்கள் அண்ணன் தம்பி.தம்பி கேட்டவர் அண்ணனின் மகன் சாதாரண மனிதன் மற்றும் நாம் ஹீரோவும்.நம்ம ஹீரோ மற்றும் மனிதர்களை அளிக்க க்ரக்கன் என்னும் கடல் ஜந்து அல்லது அரக்கனை கடலில் இருந்து எழுப்ப முயசிக்கிறார் தம்பி கடவுள்.

கிராகனை அளிக்க ஒரு பாம்பு பெண்ணின் தலை வேண்டும் அந்த பாம்பு தலை பெண்ணின் கண்களை பார்த்தல் கற்சிலை ஆகி விடுவர்.மக்களை காப்பாற்ற அந்த பாபு பெண்ணை தேடி நம்ம ஹீரோ  மற்றும் குழுவினர் இந்த ஆபத்தான பயணத்தை தொடர்கின்றனர். இறுதியில் பாம்பு பெண்ணை கண்டர்களா ?அந்த கிராக்கனை அழித்தார்களா ?என்பதே கதை.

மிகப்பெரிய தேள்களுடன் நடக்கும் சண்டை அருமையாக எடுத்துள்ளனர் ஒரு சில மிருகங்கள் மட்டும் கொஞ்சம் அருவருப்பாக இருந்தாலும் படம் கொஞ்சம் கூட போர்அடிக்கல நேத்து இரவும் இப்பவும் பாத்தேன் படத்தை பாருங்க நேரம் இருந்தால்.படம் 3D ல எடுத்துருக்காங்க பெரிய திரையில் பாக்கணும்.


படத்தின் ட்ரைலர் :