Blogger news

adharva school

சனி, 11 ஆகஸ்ட், 2012

திருப்புமுனை :இந்த பிரச்சனைய படிக்காதீங்க

"நடந்ததையே நினைத்து வருத்தப்படுவதால் எந்த பயனும் இல்லை.அடுத்து நடப்பதை யோசிப்பதே புத்திசாலித்தனம்" 
மேலே உள்ளது எல்லார் வாழ்க்கையிலும் நடப்பதே நடந்ததையே நினைத்து வருத்தப்படுபவர்கள் அதிகம் அவர்கள் வாழ்கையில் முன்னேற வாய்ப்பில்லாமல் போகிறது அடுத்து நடப்பதை யோசிப்பவர்கள் வாழ்கையில் முன்னேறுகிறார்கள் அதற்கு சிறந்த  உதாரணம் பல பேர் அவர்களில் வால்ட் டிஸ்னியும்  ஒருத்தர் அவரின் வாழ்வில் நடந்த திருப்பு முனை பற்றி காண்போம்.


வால்ட் டிஸ்னி ஓர் ஓவியர்."ஆஸ்வால்ட் "என்ற பெயரில் முயல் கதாபத்திரம் ஒன்றை உருவாக்கி அனிமேஷன் படங்களை தயாரித்து புகழ் பெற்றார் நல்ல சம்பாரித்தார் மற்றவர்கள் தந்திரமாக சூழ்ச்சி செய்து அவருடைய ஆஸ்வால்ட் கதாபத்திரத்தை அவரிடம் இருந்து பறித்து விட்டனர்.அதுமட்டும் இல்லாமல் அவரிடம் பணிபுரிந்த ஓவியர்கள் அனிமேஷன் நிபுணர்கள் இப்போது அவர்கள்  பக்கம்.   

வெகுநேரம் புலம்பிய வால்ட்  டிஸ்னி  கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தார் "நடந்ததையே நினைத்து வருத்தப்படுவதால் எந்த பயனும் இல்லை.அடுத்து நடப்பதை யோசிப்பதே புத்திசாலித்தனம்" 'அவர்கள் என் படைப்பை பறித்து விடலாம் ஆனால் என் கற்பனைகளை எதுவும் செய்ய முடியாது  ஆஸ்வால்ட் பதிலாக அதை போலவே வேறொரு இன்னொரு வெற்றிகரமான கதாபத்திரத்தை உருவாக்குவேன்"என்று உறுதியாக நினைத்தார்.புதிய அனிமேஷன் கதாபாத்திரங்களை நினைத்து கடைசியாக   அவரின் செல்ல பிராணி ஒரு எலி "மார்டிமெர் " அதை மனதில் நினைத்து அதை வரைந்து அதற்கு மனிதரை போல் பான்ட்,சட்டை எல்லாம் போட்டு அசத்தலாக வரைந்தார்.

அதை தன் மனைவியிடம்(லில்லியன்) காண்பித்தும் அவர் வாவ் என்று துள்ளி குதித்தார். கதாபாத்திரத்தின்   பெயர் என்ன என்று கேட்டார்  லில்லியன் "மார்டிமெர்" என்று சொன்னார் வால்ட்  டிஸ்னி.அதற்கு  லில்லியன் "பெயர் நீளமா உள்ளது வேற பேர் வைப்போம்"னு சொன்னார்."சரி ஒரு நல்ல பேர நீயே சொல்லு"னு சொன்னார் டிஸ்னி அதற்கு அவர் மக்கள் மனசுல எப்பொதும் நிக்கணும் அதனால் "மிக்கி " னு ஒரு பேர சொன்னங்க அந்த மிக்கிதான் இப்ப உலகத்தையே  கலக்கிய "மிக்கி மௌஸ்" கதாபத்திரம்.
சந்தர்ப்ப சூழ்நிலையோ பெரிய பிரச்சனையோ வரும்போதுதான் நமக்குள்ள இருக்குற அலாதியான பல திமைகள வெளிபடுத்துது. நடந்ததையே நினைத்து வருத்தப்படுவதால் எந்த பயனும் இல்லை.அடுத்து நடப்பதை யோசிப்பதே புத்திசாலித்தனம் நண்பர்களே.    
நன்றி:படங்கள் கூகிள்    

நான் படித்த, ரசித்த நகைச்சுவை

நான் படித்த, ரசித்த நகைச்சுவை :



ஒருவர் காவல் நிலையத்தைத் தேடிப்  போனார்.
"சார்! நான் அறுபதாம் கல்யாணம் பண்ணிக்க போறேன் எனக்கு போலீஸ் பாதுகாப்பு வேணும்!"
"இதுக்கு எதுக்கு பாதுகாப்பு ? உங்களுக்கு யாராலே ஆபத்து வரபோகுது?"
"நான் கட்டிகிட்ட 59 பேரால ஆபத்து வரலாம்!"  இதான்  அந்த நகைசுவை.
நீங்களா இருந்த அவர என்ன பண்ணு வீங்க?

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

ஆபிரகாம் லிங்கன் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி:

ஆபிரகாம் லிங்கன் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி

ஒரு சமயம்  ஆபிரகாம் லிங்கன்  சட்டசபைத் தெர்டஹ்ளில் போட்டி இட்டார். அவரை எதிர்த்து ஒரு பாதிரியார்  போட்டி இட்டார்.பாதிரியார்   உரையாற்றும் ஒரு கூட்டத்திற்கு லிங்கனும் போயிருந்தார். பாதிரியார் தம் பேச்சின் இடையே "உங்களில் எத்தனை பேர் சொர்கத்திற்கு போக போகிறீர்கள் ?,கையைத் தூக்குங்கள் "என்றார்.

கூட்டத்திலிருந்த  எல்லோரும் கையைத் தூக்கினர் ஆனால் லிங்கன் மட்டும் அமைதியாக இருந்தார்.பாதிரியார்"என்ன லிங்கன்?நீங்கள் எங்கே போகப் போகிறீர்? என்று கேலியாக கேட்டார் ."நான் சட்டசபைக்கு போகப்போகிறேன் " என்று பட்டென்று பதில் சொன்னார் லிங்கன்.

அவர் சொன்னது போலவே தேர்தல் முடியும் அமைந்தது. நண்பர்களே இதான் தன்னம்பிக்கை வாழ்வின் வெற்றிக்கு உறுதுணையை இருப்பது.

செவ்வாய், 7 ஆகஸ்ட், 2012

படித்ததில் பிடித்தது முல்லாவிடம் ஞானி கண்ட தோல்வி :

  முல்லாவிடம் ஞானி கண்ட தோல்வி :


தன்னை மகா ஞானியாக கருதிக் கொண்ட ஒருவர் முல்லாவிடம் விவாதம் புரிந்து,தனது மேதாவித்தனத்தைப் பறைசாற்ற விரும்பினார்.தனது விருப்பத்தை முல்லாவிடம் தெரிவித்துக் கொண்டார் முல்லாவும் ஒப்புக்கொண்டார்.முல்லாவின் இல்லத்திலேயே ஒரு குறிப்பிட்ட நாளில் இருவரும் சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டது.


குறிப்பிட்ட நேரத்தில் அந்த மஹா ஞானி   முல்லாவின் இல்லத்திற்கு வந்தார். அனால் முல்லா வேண்டுமென்றே அந்த நேரத்தில் வேறெங்கோ சென்றுவிட்டார். வெகு நேரம் முல்லாவிற்காக  காத்திருந்த ஞானி பொறுமை இழந்து எரிச்சலுடன் வெளியேற முடிவு முடிவு செய்தார்.

அப்போது ஒரு சுண்ணக் கட்டியால் முல்லாவின் வீட்டுக் கதவில் "அறிவு கெட்ட கழுதை" என்று எழுதிவிட்டு சென்றார்.அவர் சென்ற பின் முல்லா வீடு வந்து சேர்ந்தார் வாசற்கதவை பார்த்தார் தம்மோடு விவாதிக்க வந்தவர்தான் கோவத்தில் எப்படி எழுதி இருக்கிறார் என்று புரிந்து கொண்டார் .

முல்லா சிறிது  நேரத்தில் அந்த ஞானியின் வீட்டிற்கு சென்றார்.அவரிடம் முல்லா "அறிர் பெருமானே தாங்கள் என்னை பொருத்தருள வேண்டும் தங்களை நன் வர சொன்ன நேரத்தில் வேறொரு வேலையாக வெளியே சென்று விட்டேன்.  வீடு திரும்பியதும் தான் தாங்கள் வந்து சென்றதை தெரிவிக்கும் வகையில் வாசற் கதவில் உங்கள் பெயரை எழுதி விட்டு சென்றதை அறிந்து தங்களிடம் மன்னிப்பு கேட்க ஓடோடி வந்தேன் "என்று அடக்கமாக கூறினார்.இதற்க்கு அந்த ஞானியால் பதில் ஏதும் கொடுக்க  முடியாமல் அந்த மகா ஞானி  அசடு வழிந்தார். இதுக்கு பெயர்தான் presence of mind  நண்பர்களே. 

சனி, 4 ஆகஸ்ட், 2012

நண்பர்கள் தினம்

அணைத்து நண்பர்களுக்கும்  நண்பர்கள் தின வாழ்த்துக்குகள் :









வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

படித்ததில் பிடித்தது :

படித்ததில்  பிடித்தது :

நீண்ட இடைவேளைக்கு பிறகு இன்று கிடைத்த சிறு நேரத்தில் ஒரு பதிவு

கருவறையில் நான் இருந்தவரை வெளிச்சத்தை கண்டதில்லை பிறந்த பிறகும் நான் கருவறையில் தான் வாழ்கிறேன். 
                                                     -கண் இல்லாத குழந்தை-
கண்களை தானம் செய்யுங்கள்  பலரின் வாழ்வில் அவர்களின் கண்களுக்கு தீபம் ஏற்றுங்கள்.