Blogger news

adharva school

stories லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
stories லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 12 செப்டம்பர், 2013

இது தான் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வது ஜூலியா சிந்திக்கவும்

ஒரு வங்கியில் கொள்ளை அடிக்கும் பொழுது கொள்ளைக்காரன் " யாரும் நகராதீர்கள், பணம் நாட்டினுடையது, உங்கள் உயிர் உங்களுடையது "
என்றான்..
எனவே அனைவரும் அமைதியாக இருந்தனர், இது தான் "மனம் மாற்றும் கருத்து ".
ஒரு பெண் கொள்ளைக்காரன் கண்டு பயந்தால் "நங்கள் கற்பழிக்க வரவில்லை கொள்ளையடிக்க வந்திருக்கிறோம்,என்றான். இது தான் "தொழில் முறை யுக்தி",
கவனம் சிதறாமல் இருப்பதற்கு.
கொள்ளையடித்து விட்டு வீட்டுக்கு திரும்பும்
போது ஒருத்தன் கேட்டான் "எவ்வளவு பணம் இருக்குது னு எண்ணுவோம்". இன்னொருவன் " அட முட்டாளே, டிவி'ல
நியூஸ் போடுவாங்க அதுல பாத்துக்கலாம்" என்றான்.
இது தான் "அனுபவம்" என்பது,
திறமைகளை விட பெரியது.
அவர்கள் கொள்ளை அடித்து சென்ற பிறகு வங்கி மேலாளர், ஊழியரிடம் காவல்துறைக்கு தெரியப்படுத்துங்கள்
என்றார், ஆனால் அவன் "நாம ஒரு 10 கோடி எடுத்துட்டு, மொத்தம் 50 கோடின்னு கணக்கு சொல்லிடலாம்" என்றான்.
இது தான் "அலைகளை நோக்கி நீந்து"என்பது.
அதை கேட்டு மேலாளர் சொன்னார், "மாதா மாதம் கொள்ளை நடந்தால் நல்லா இருக்கும்
" இது தான் "அலுப்பின் வெறுப்பு", வேலையை விட சொந்த சந்தோசம் தான் முக்கியம் இவர்களுக்கு.
மறுநாள் டிவி'யில் 100 கோடி கொள்ளை அடிக்கப்பட்டது என்று செய்தி வந்தது. அந்த கொள்ளைக்காரன் ஆக்ரோஷத்துடன் "நாங்கள் உயிரை பணயம் வைத்து 30
கோடி தான் கொள்ளை அடித்தோம், ஆனால் அவர்கள் 70
கோடி கொள்ளை அடித்துவிட்டனர், கொள்ளை அடித்தவனை விட படித்தவனே மிக கேவலமாக நடந்து கொள்கிறான்"
இதுவே "அறிவு தங்கத்துக்கு நிகரானது" என்று சொல்லப்படுகிறது
அந்த வங்கி மேலாளர் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தார், கொள்ளை சம்பவத்தால் தான் இழந்த பங்கு சந்தையை மீட்டார்.
இது தான் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வது.
இப்பொழுது சொல்லுங்கள், இதில் யாரு உண்மையான கொள்ளைக்காரன் ??

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

ஆபிரகாம் லிங்கன் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி:

ஆபிரகாம் லிங்கன் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி

ஒரு சமயம்  ஆபிரகாம் லிங்கன்  சட்டசபைத் தெர்டஹ்ளில் போட்டி இட்டார். அவரை எதிர்த்து ஒரு பாதிரியார்  போட்டி இட்டார்.பாதிரியார்   உரையாற்றும் ஒரு கூட்டத்திற்கு லிங்கனும் போயிருந்தார். பாதிரியார் தம் பேச்சின் இடையே "உங்களில் எத்தனை பேர் சொர்கத்திற்கு போக போகிறீர்கள் ?,கையைத் தூக்குங்கள் "என்றார்.

கூட்டத்திலிருந்த  எல்லோரும் கையைத் தூக்கினர் ஆனால் லிங்கன் மட்டும் அமைதியாக இருந்தார்.பாதிரியார்"என்ன லிங்கன்?நீங்கள் எங்கே போகப் போகிறீர்? என்று கேலியாக கேட்டார் ."நான் சட்டசபைக்கு போகப்போகிறேன் " என்று பட்டென்று பதில் சொன்னார் லிங்கன்.

அவர் சொன்னது போலவே தேர்தல் முடியும் அமைந்தது. நண்பர்களே இதான் தன்னம்பிக்கை வாழ்வின் வெற்றிக்கு உறுதுணையை இருப்பது.