Blogger news

adharva school

திங்கள், 22 ஜூலை, 2013

குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தைத் தரும் 5 சிறந்த உணவுகள்

குழந்தைகளுக்கு ஆரோக்கியத்தைத் தரும் 5 சிறந்த  உணவுகள்:
ஓட்ஸ் 
ஆராய்ச்சி ஒன்றில் எந்த குழந்தைகள் ஓட்ஸை சாப்பிடுகிறார்களோ, அந்த குழந்தைகளுக்கு கவனக்குறைவு நீங்கி, படிப்பில் ஆர்வத்துடன் இருப்பார்கள் என்று சொல்கிறது. எனவே நார்ச்சத்து நிறைந்த தானியங்கள், ஓட்ஸ் போன்றவைகளை குழந்தைகளுக்கு கொடுத்தால், அவை மெதுவாக செரிமானமடைவதோடு, நிலையான ஆற்றலை குழந்தைகளுக்கு வழங்கும்.

முட்டை 
முட்டையில் புரதச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், அவைகளில் கால்சியம் மற்றும் அவற்றை உடலில் உறிஞ்சுவதற்கு உதவும் வைட்டமின் டி போன்றவை நிறைந்துள்ளது. எனவே இந்த முட்டையை காலை வேளையில் கொடுத்தால், குழந்தைகளுக்கு நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருக்கும்.

பழங்கள் 
பழங்களில் குழந்தைகளுக்கான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் பழங்களில் கூட நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக குழந்தைகளுக்கு பெர்ரிப் பழங்கள், முலாம்பழம், கிவிப்பழம் மற்றும் ஆரஞ்சு போன்றவைகள் மிகவும் சிறந்த பழங்களாகும்.
நட்ஸ் 
நட்ஸ்களில் நல்ல கொழுப்புகள் அதிகம் நிறைந்திருப்பதால், அதனை குழந்தைகளுக்குக் கொடுத்தால், அவை உடலின் வளர்ச்சியை மேம்படுத்துவதோடு, இதயத்தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும. அதிலும் காலையில் நல்ல கொழுப்புக்கள் நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுத்தால், அது நாள் முழுவதும் ஆற்றலுடன் செயல்பட உதவி புரியும். குறிப்பாக நட்ஸில் பேரிச்சம் பழம் மிகவும் சிறந்த ஒரு உணவுப் பொருள்.

பசலை கீரை 
பசலை கீரையில் எலும்புகள் மற்றும் மூளைக்கு தேவையான சத்துக்களான இரும்புச்சத்து, கால்சியம், ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் ஏ, சி போன்றவை நிறைந்துள்ளது. ஆகவே இந்த உணவுப் பொருளை குழந்தைக்கு கொடுத்தால் மிகவும் நல்லது.
முட்டைக்கோஸ்
 குறுக்குவெட்டு தோற்றத்தையுடைய காய்கறியான முட்டைக்கோஸ், செரிமானத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் இதனை குழந்தைகளுக்கு கொடுத்தால், அவை குழந்தைகளை நோய்கள் எளிதில் தாக்காதவாறு பாதுகாக்கும். இந்த காய்கறியானது அப்படியே திண்பதற்கும் மற்றும் அதன் மென்மையான சுவை தன்மையினால் பல உணவுகளில் பச்சையாக சேர்த்தும் கொடுக்கலாம்.