Blogger news

adharva school

செவ்வாய், 18 அக்டோபர், 2011

நோய்களை கண்டறியும் புதிய ஸ்மார்ட் போன்

நோய்களை கண்டறியும் புதிய ஸ்மார்ட் போன் :

இன்று பெரிய அளவில் வளர்ந்து வரும் மருத்துவ விஞ்ஞானத்திற்கு துணைபுரியும் வகையில், நோய்கள் மற்றும் அதற்கான தீர்வுகள் பற்றிய தகவல்கள் அடங்கிய புதிய ஸ்மார்ட்போனை மொபிசேன்ட்டே நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

மொபியஸ் என்ற பெயரில் வரும் இந்த மொபைல் உண்மையிலேயே டாக்டர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் ஒரு வரப்பிரசாதம் தான். மருத்துவ ரீதியிலான பல பிரச்சனைகள் பற்றியும், மருத்துவ ஆலோசனைகளையும் வாரி வழங்குகிறது இந்த புதிய மொபைல்.

இந்த மொபைலில் உள்ள அப்ளிக்கேஷன் வசதிகளின் மூலம் பல நோய்களைப் பற்றியும், அதன் தீர்வுகள் பற்றியும் புகைப்படத்துடன் தெளிவாகக் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். இதில் வேஸ்குலர் டிவிடி இவேல்யுவேஷன் பற்றிய தகவல்களும், வேஸ்குலர் அக்சஸ் என்ற அப்ளிகேஷன் மூலம் அதற்கான தீர்வுகளையும் தெரிந்து கொள்ள முடியும்.

அதோடு எக்டோப்பிக் பிரக்னன்சி, அம்னியோட்டிக் ஃப்ளூயிட் அசஸ்மென்ட் பற்றிய விவரங்களை அறிவதற்கும் இந்த மொபைலில் உள்ள அப்ளிக்கேஷன் வசதிகள் பயன்படுகின்றது.

இந்த மொபியஸ்மொபைல் மருத்துவர்களுக்கும், லேப் டெக்னீஷியன்களுக்கும் பெரிய அளவில் உதவும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. பொழுது போக்கு அம்சங்களை முன்னிலைப்படுத்தி நிறைய மொபைல்கள் வெளிவருகின்றன.

அப்படிப்பட்ட மொபைல்களுக்கு மத்தியில் மருத்துவ உலகிற்கு உதவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த மொபைல் நிச்சயம் வாடிக்கையாளர்களால் பெரிதும் விரும்பப்படும் என்று எதிர் பார்க்கப்படுகின்றது. இதில் 4.1 இஞ்ச் டபிள்யூவிஜிஏ திரை வசதி கொடுக்கப்பட்டுள்ளது. இது 800 X 480 பிக்ஸல் திரை ரிசல்யூஷன் கொண்டது.

இதில் உள்ள மெடிக்கல் அப்ளிக்கேஷன் வசதிகளின் மூலம் தெரிந்து கொள்ளும் தகவல்களை சேகரித்து வைத்துக் கொள்ள 8ஜிபி வரை மெமரி ஸ்டோரேஜ் வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்மொபைல் விண்டோஸ் 6.5 தொழில் நுட்பத்தைக் கொண்டது.

அதோடு விண்டோஸ் எக்ஸ்பி, விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலமும் இயங்கும் தன்மைக் கொண்டது. மொபியஸ் ஸ்மார்ட் மொபைலில் கார்டியாக், பெரிஃபெரல் வெசல்,பெல்விக் டயக்னாசிஸ் போன்ற பிரச்சனை பற்றியும் தகவல்களைத் தொரிந்து கொள்ள முடியும்.

இந்த மொபியஸ் ஸ்மார்ட்மொபைல் ரூ.37,500 விலையில் கிடைக்கும் என்று எதிர் பார்க்கபடுகிறது



நன்றி:தட்ஸ்தமிழ்