Blogger news

adharva school

புதன், 2 நவம்பர், 2011

பால் கூட குழந்தைகளுக்கு அலர்ஜி ஆகும்


தாய்பால் கூட குழந்தைகளுக்கு அலர்ஜி ஆகும் 

குழந்தைக்கு தாய்பால் மிகவும் முக்கியமான ஒன்றாகும் அதை சரியான முறையில் குடுக்க வேண்டும் இது மிகவும் முக்கியமான ஒன்று.பால் அலர்ஜி குழந்தைக்கு ஏற்படும் பொதுவான சிக்கல்.
இது எப்படி ஏற்படுகின்றதென்றால் குழந்தையின் நோய் எதிர்ப்பு அமைப்பு பால் புரதம் மற்றும் ஆண்டி பாடிகள் உடன் சேர்ந்து செயல்படும்போது குழந்தைக்கு பால் அலர்ஜி உண்டாகிறது.
இதனால் குழந்தைகளுக்கு வயற்று வலி,எரிச்சல் உடல் அலுப்பையும் கொடுக்கும்..இதனால் குழந்தைக்கு வயற்று போக்கு,தோல் தடிப்பு மற்றும் வாந்தி ஆகியவை ஏற்படும்.
பெரும்பாலான குழந்தைகளுக்கு மாட்டுப் பால் குடுத்தால் இந்த அலர்ஜியை ஏற்படுத்தும்.
தாய் பால்குடுக்கும் போது தாய் மாட்டுப்பால் குடித்தாலும் அதன் மூலமும் குழந்தைக்கு  அலர்ஜி வரலாம்.  

பால் அலர்ஜியின் பொதுவான அறிகுறிகள்:

  • குழந்தைக்கு குறைந்த எடை அல்லது எடை அதிகரிக்காமல்இருத்தல்
  • சுவாச பிரச்சனைகள் 
  • வாயு (காஸ்)
  • வாந்தி
  • வயற்றுப்போக்கு
  • தோலில் அலர்ஜி
  • நீர் போக்கு 
  • பசிஇன்மை
  • கெட்டியான சளி மூக்கிலும் தொண்டையிலும் இருத்தல் 
  • படை
  • சிரங்கு
  • ஆஸ்துமா 
இவை ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி குழந்தையை பாதுகாக்கவும்
மாட்டுப்பாலை தவிர்க்கவும்.