Blogger news

adharva school

வியாழன், 5 ஏப்ரல், 2012

ஹூண்டாய் டேப்லெட் குறைந்த விலையில்


Hyundai A7 Tablet
ஹூண்டாய் ஒரு புதிய 7 இன்ச் டேப்லெட்டை தயாரித்து வருகிறது. இந்த புதிய டேப்லெட் குறைந்த விலையில் வரும் ஆன்ட்ராய்டு டேப்லெட் ஆகும். குறிப்பாக ஹூண்டாய் ரசிகர்களுக்கும் மற்றும் ஆன்ட்ராய்டு வாடிக்கையாளர்களுக்கும் இந்த புதிய டேப்லெட் வரப்பிரசாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிறிய எ7 டேப்லெட் பல சிறந்த தொழில் நுட்பங்களைக் கொண்டு வருகிறது.
குறிப்பாக இந்த எ7 டேப்லெட் 480 x 800 பிக்சல் ரிசலூசன் கொண்ட 7 இன்ச் கப்பாசிட்டிவ் தொடுதிரை கொண்டு வருவதால் இதில் படங்களும், வீடியோவும் பக்காவாக துல்லியமாக இருக்கும். மேலும் இதில் 5 பாய்ண்ட் துணை மல்டி டச் வசதிகள் உள்ளன.
இந்த டேப்லெட் 1.5 ஜிஹெர்ட்ஸ் கோர்ட்டெக்ஸ் எ8 ப்ராசஸர் கொண்டு வருவதால் இதன் செயல்திறன் மிக வேகமாக அதே நேரத்தில் உறுதியாக இருக்கும். இதன் எஸ்டி கார்டுடன் வரும் 8ஜிபி மெமரியை விரிவு செய்யவும் முடியும்.
மேலும் இந்த டேப்லெட்டில் மைக்ரோ எச்டிஎம்ஐ அவுட் உள்ளதால் இதில் வீடியோ கேமை அட்டகாசமாக விளையாட முடியும். மேலும் இதில் வீடியோ பார்ப்பதும் மிக சிறிந்த அனுபவமாக இருக்கும்.
இறுதியாக இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தில் இயங்குவதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இதன் 0.3 எம்பி கேமரா மிகத் தெளிவாக இருக்கிறது.
இந்த ஹூண்டாய் எ7 டேப்லெட் போட்டோ கேலரி டிஸ்ப்ளேக்காக மிகப் பெரிய இடத்தைக் கொண்டிருப்பதால் டிஸ்ப்ளேயில் ஒரே நேரத்தில் 8 போட்டோக்களைப் பார்க்க முடியும். இந்த அம்சம் குறிப்பாக இளைஞர்களைக் கண்டிப்பாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த எ7 டேப்லெட் வெவ்வேறு வகையான 20 எடிட்டிங் வசதிகளையும் கொண்டு இருக்கிறது. மேலும் இதில் நவீன் கூகுள் மியூசிக் ப்ளேயரையும் இதில் இயக்க முடியும். அதோடு இது க்ரோம் ப்ராவுசர் மற்றும் ஷார்ட் கட்டுகள் போன்றவற்றையும் சப்போர்ட் செய்கிறது.
இந்த டேப்லெட் குழந்தைகளுக்கும் மற்றும் பெரியவர்களுக்கும் ஏற்ற வகையில் இருக்கும் என நம்பலாம். இதன் விலை ரூ.6000 ஆகும்.

நன்றி:gizbot