Blogger news

adharva school

jokes லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
jokes லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 16 செப்டம்பர், 2013

ஜாலியா சிரிக்கலாமே

 ஜாலியா சிரிக்கலாமே 


வாடிக்கையாளர் : மெதுவடைக்கும், வடைகறிக்கும் என்னப்பா வித்தியாசம்? 
சர்வர் : ஒரு நாள் வித்தியாசம் தான் சார்.
 
 
அதென்னப்பா, ‘தங்க’ சாம்பார்... 
வாடிக்கையாளர் : போர்டுல எழுதியிருக்கே கோல்டு சாம்பார்... அது என்னப்பா? 
சர்வர் : அதுவா சார், சாம்பார்ல 24 கேரட் போட்டு தயார் பண்ணிருக்கோம்...
 
 
 
அப்பா : ஏண்டா... உன் நோட்டுல வீட்டு மளிகைகணக்கு, லாண்டரி கணக்கு எல்லாம் எழுதி வச்சுருக்க...?   
 மகன் : எங்க வாத்தியார்தான் வீட்டுக் கணக்கை எழுதி வரச் சொன்னாருப்பா.
ஆசிரியர் : நீ எதிர்காலத்துல என்னவாக ஆசைப் படுற... 
மாணவன் : டாக்டர் இல்லாட்டி பைலட் ஆகணும் சார்... 
ஆசிரியர் : எப்படியோ மக்கள மேல அனுப்பிடணும்கறதுல உறுதியா இருக்க...
 

புதன், 11 செப்டம்பர், 2013

ஜாலியா சிரிங்க

ஜாலியா சிரிங்க 

கணவன் மனைவி இருவரும் ஜெருசலேம் ஊருக்கு டூர் போனாங்க.. போன இடத்துல மனைவி இறந்துட்டா...
அங்க இருந்த சர்ச் பாதர் சொன்னார்... 'உங்க மனைவி உடலை இந்தியா கொண்டு போகணும்னா பத்தாயிரம் டாலர் ஆகும்.. இங்கேயே புதைச்சிட வெறும் நூறு டாலர் தான் ஆகும்...'
கணவன் சொன்னான்.. 'நான் இந்தியாவுக்கே கொண்டு போய்டறேன் சார்..'
பாதர் ஷாக் ஆகிட்டார் 'உங்க மனைவி மேல உங்களுக்கு அவ்ளோ பாசமா...' கணவன் சொன்னான்.. 'அதெல்லாம் இல்லை சார்.. இங்க புதைச்ச இயேசு கிறிஸ்த்து மூணு நாளுல உயிரோட எழுந்து வந்துட்டார்.. அதான் பயமா இருக்கு சார்..'

சனி, 11 ஆகஸ்ட், 2012

நான் படித்த, ரசித்த நகைச்சுவை

நான் படித்த, ரசித்த நகைச்சுவை :



ஒருவர் காவல் நிலையத்தைத் தேடிப்  போனார்.
"சார்! நான் அறுபதாம் கல்யாணம் பண்ணிக்க போறேன் எனக்கு போலீஸ் பாதுகாப்பு வேணும்!"
"இதுக்கு எதுக்கு பாதுகாப்பு ? உங்களுக்கு யாராலே ஆபத்து வரபோகுது?"
"நான் கட்டிகிட்ட 59 பேரால ஆபத்து வரலாம்!"  இதான்  அந்த நகைசுவை.
நீங்களா இருந்த அவர என்ன பண்ணு வீங்க?