Blogger news

adharva school

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

எந்திரன் 2


சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து ஷங்கர் இயக்கிய இரண்டாவது படம் எந்திரன். ரூ 140 கோடி செலவில் உருவான மெகா படம் இது. 2010-ல் வெளியான இந்தப் படம் இந்திய சினிமா வரலாற்றைப் புரட்டிப் போட்டது. உலகம் முழுக்க ரூ 375 கோடிகளைக் குவித்தது இந்தப் படம்
இந்த இரு படங்களின் இரண்டாம் பாகங்களையும் உருவாக்குவதில் முனைப்பு காட்டுகிறார் இயக்குநர் ஷங்கர். எந்திரன் 2 படத்துக்கான கதை முன்பே தயாராகிவிட்டது. இந்தப் படத்துக்கான ஷூட்டிங்கைத் தொடங்க தயாராக இருப்பதாக எந்திரனுக்கு ஒளிப்பதிவு செய்த ரத்னவேல் ஏற்கெனவே கூறியது நினைவிருக்கலாம். ரஜினி உடல் நிலை காரணமாக அந்தக் கதையை தள்ளி வைத்துவிட்டு, ஐ படத்துக்குப் போய்விட்டார் ஷங்கர்.
கோச்சடையான் படத்தை முடித்து விட்டு ரஜினி ஓய்வில் இருக்கிறார். அடுத்த படத்துக்கான கதையை அவர் இன்னும் முடிவு செய்யவில்லை. ஆனால் ஷங்கரை சந்தித்து கதை கேட்டுள்ளார். ஷங்கர் ஐ வேலைகளை முடித்ததுமே ரஜினி நடிக்கும் புதுப்பட அறிவிப்பு வரும் எனத் தெரிகிறது