Blogger news

adharva school

புதன், 27 ஜூலை, 2011

விலை குறைவான ஆன்ட்ராய்டு போன் அறிமுகப்படுத்த இருக்கிறது சாம்சங்

அடிக்கடி தொடர்ந்து பல நிறுவனங்கள்  ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தி வந்தாலும், அதில் ஏதாவது ஒரு விஷேச அம்சத்தையாவது கூடுதலாக வைத்து கொடுக்க வேண்டும் என்று விரும்புகிறது. இந்த வகையில், ரூ.8,000ல் ஆன்ட்ராய்டு ஓஎஸ் கொண்ட போனை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது சாம்சங்.

சாம்சங் ட்ரான்ஸ்பார்ம் என்ற பெயரில் மார்க்கெட்டுக்கு வர இருக்கும் அந்த ஸ்மார்ட்போன் 3.5 இஞ்ச் தொடுதிரை, கிவெர்ட்டி கீபேடு மற்றும் ஸ்லைடர் கொண்டதாக வருகிறது. ஆன்ட்ராய்டு ப்ரேயோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் இந்த போன் 800 மெகாஹெர்ட்ஸ் பிராசஸரில் வேகத்தில் சளைக்காது.

இந்த போனில் 3.2 மெகாபிக்செல் கேமரா மற்றும் வீடியோ ரெக்கார்டிங் வசதியை கொண்டிருக்கும். எம்பி-3, எம்பி-4, ஏஏசி+,ஏவிஐ, 3ஜிபி மற்றும் டபிள்யூஎம்வி ஆகிய அனைத்து பார்மெட் மல்டிமீடியா பார்மெட்டுகளையும் இயக்க முடியும்.

எப்எம் ரேடியோ, 3.5மிமீ விட்டம் கொண்ட ஆடியோ ஜாக், ஹோம் தியேட்டரில் இணைக்கும் வசதி ஆகியவை உண்டும். 512 எம்பி மெமரி திறன் கொண்ட இந்த போனின் சேமிப்பு திறனை 32ஜிபி வரை அதிகரித்துக்கொள்ளலாம்.

3ஜி, வைஃபை, புளூடூத், ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் இணைப்பு வசதிள் இந்த போனை ஸ்மார்ட்போன் அந்தஸ்துக்கு உயர்த்துகிறது. 3 மணிநேர டாக்டைம், 3 நாட்கள் ஸ்டான்ட்-பை மோடு கொண்ட பேட்டரி வலு சேர்க்கிறது.

சாம்சங் ட்ரான்பார்ம் குறிப்பிடத்தக்க அம்சங்கள்:

ஆன்ட்ராய்டு ப்ரேயோ ஓஎஸ்

800மெகாஹெர்ட்ஸ் பிராசஸர்

ஜாவா சப்போர்ட்

3ஜி

வைஃபை மற்றும் புளூடூத்

3.2 மெகாபிக்செல் கேமரா

32ஜிபி வரை சேமிப்பு திறனை கூட்டும் வசதி

ஸ்மார்ட்போனுக்கான அனைத்து அம்சங்களையும் பெற்றுள்ள இந்த போன் ரூ.8,000 விலையில் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்த சாம்சங் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.