Blogger news

adharva school

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

படித்ததில் பிடித்தது: காமராஜர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி

படித்ததில் பிடித்தது: காமராஜர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி :

காமராஜர் அவர்கள் ஒரு முறை சட்டமன்றத்திற்கு செல்லும் பொழுது, மேலே உள்ள அறைக்கு செல்வதற்காக மின் தூக்கியில் (லிப்ட்) ஏறினார், அப்பொழுது அங்கே வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த இளைஞர் கண்ணில் கண்ணீருடன் காமராஜரிடம் மனு ஒன்றை நீட்டினர், மனுவை வாங்கி பையில் வைத்துவிட்டு, அவரிடம் என்னவென்று வினவினார்.


அந்த இளைஞன், "தொழில் துறையில் இருந்து அரசானை ஒன்று வந்திருக்கின்றது, அதில் பத்தாம் வகுப்பிற்கு குறைவாக படித்தவர்கள் இங்கு பணிபுரிய அனுமதில்லை என்று குறிப்பிட்டிருந்தது" என்றான்..

அவனின் வலியறிந்த காமராஜர் சட்டமன்றத்தில் நுழைந்ததும் கூறியது, "ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் அரசாணையை பிறப்பித்தது யார், பொத்தானை அழுத்தினால் மேலே போகிறது, பொத்தானை அழுத்தினால் கீழே வருகிறது, இதற்க்கு எதுக்கு பத்தாவது படிக்க வேண்டும், அவனாவது எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளான், ஆனால் நான் அது கூட படிக்கவில்லையே, அப்படி என்றால் எனக்கு மின் தூக்கியை துடைக்கும் வேலை கூட கிடைக்காதே.." என்றராராம். அரசானை பிறப்பித்தவர் வாயடைத்து நின்றராராம்..

:: "தன்னை இகழ்ந்து, பிறரை உயர்த்திக்காட்டுகிறவனே உயர்ந்து நிற்கிறான் 


நன்றி:

முகப்புத்தகம்
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா