Blogger news

adharva school

வியாழன், 3 ஜூலை, 2014

பேருந்தில் நான் கண்ட மனிதாபிமானம்

பேருந்தில் நான் கண்ட மனிதாபிமானம் :

இன்றைக்கு ஈரோடு  டு அந்தியூர் பேருந்தில் சென்றபோது  பவானி பேருந்து நிலையத்தில் பேருந்து சிறிது நேரம் நின்றது அப்போது வெளியே ஒரு இளம் பெண் ஒரு இரண்டு வயது குழந்தையை வைத்து வித்தை காட்டி கொண்டு இருந்தார் முடிந்ததும் அக்குழந்தை ஒரு கிண்ணத்துடன் பேருந்தில் ஏறி அனைவரிடமும் காசு கேட்டது அப்போது ஒரு இசுலாமிய பெண்மணி அக்குழந்தையை மடியில் உக்கார வைத்து "நான் உனக்கு சாப்பாடு நல்ல துணிமணி பள்ளிகுடம் எல்லாம் சேத்தி விடறேன் என்குட வந்தரய "என கேட்டார் அதற்கு அக்குழந்தை மாட்டேன் என்பது போல் தலை ஆட்டியது அப்பெண்மணி அந்த குழந்தைக்கு பத்து ரூபாயை கொடுத்தார் அதேபோல் அவர் உறவினரிடமும் கொடுக்க சொல்ல அவரும் கொடுத்தார் எல்லாரும் கொடுத்தனர் அக்குழந்தை இறங்கியதும் அப்பெண்மணி கூறினார் " இந்த குழந்தைட்ட இருந்து காசு மட்டும் வாங்கிட்டு ஒரு பால்கூட வாங்கி தரமாட்டாங்க .ஆண்டவன் கொழந்த இல்லாதவங்களுக்கு கொளந்தைய குடுக்கறது இல்ல ஆனா இவங்களுக்கு கொளந்தைய குடுத்து குழந்தையை கஷ்ட படுத்தறான் " என்று கூறினார்
இந்த நிகழ்வு நெகிழ்ச்சியாக அமைந்தது. மனிதாபிமானம் இன்னும் வளர்ந்து கொண்டு உள்ளது இந்த பெண்மணி போல் உள்ளவர்களினால் .....