Blogger news

adharva school

புதன், 30 ஜனவரி, 2013

வைட்டமின் ஈ அதிகம் உள்ள உணவுகள்

வைட்டமின்கள் குறைபாட்டினால் நிறைய பிரச்சனைகள் உடலும் வரும். அதிலும் சரியான உடல் வளர்ச்சிக்கு, வைட்டமின்கள் போதுமான அளவில் இருக்க வேண்டும். வைட்டமின்களில் நிறைய உள்ளன. அவை வைட்டமின் ஏ, சி, ஈ, டி, பி12, பி11. இத்தகைய வைட்டமின்கள் நிறைய நன்மைகளை உள்ளடக்கியுள்ளன. இருப்பினும் அதில் வைட்டமின் ஈ மிகவும் முக்கியமான ஒன்று. வைட்டமின் ஈ சத்துக்கள் உடலில் அதிகம் இருந்தால், உடலில் ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கலாம். ஏனெனில் இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால், கிருமிகள் உடலில் தங்காமல் இருக்கும். அதுமட்டுமில்லாமல், வைட்டமின் ஈ சத்து சருமத்திற்கும் சிறந்தது. இந்த வைட்டமின் ஈ- நிறைந்த உணவுகளை சாப்பிட்டால், முதுமை தோற்றத்தை தள்ளிப் போடலாம். மேலும் உடலில் இரத்தம் உறைதல், நுரையீரலில் மாசுக்கள் படிவது போன்றவை தடுக்கப்படும். குறிப்பாக புற்றுநோய், நீரிழிவு, இதய நோய் உள்ளவர்கள், இந்த வைட்டமின் ஈ நிறைய உணவுகளை அதிகம் சாப்பிட்டால், இந்த நோய்களைக் கட்டுப்படுத்தி தடுக்க முடியும். இப்போது அத்தகைய நன்மைகளை உள்ளடக்கிய வைட்டமின் ஈ நிறைந்த உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!

பசலைக் கீரை 

பச்சை இலைக் காய்கறிகளுள் ஒன்றான பசலைக் கீரையில் வைட்டமின் ஈ மற்றும் இன்னும் பல ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே டயட்டில் இதனை சேர்த்துக் கொண்டால், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்
.


.

ஆலிவ் ஊறுகாய் 

ஆலிவ் ஊறுகாயில் 100 கிராம் வைட்டமின் ஈ உள்ளது. எனவே ஊறுகாய் மிகவும் பிடிக்கும் என்பவர்கள், இந்த ஆலிவ் ஊறுகாயை சாப்பிடலாம்.



வேர்க்கடலை 

ஸ்நாக்ஸில் சிறந்ததாக இருக்கும் வேர்க்கடலையில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. குறிப்பாக இதில் கரையக்கூடிய வைட்டமின் ஈ ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், அவை சளி சுரப்பியில் இருக்கும் செல் சவ்வுகளை ஒழுங்குபடுத்தும். அதுமட்டுமின்றி இவை சருமத்துளைகள் ஈஸியாக சுவாசிக்கவும் உதவும்
.



பாதாம் 

நட்ஸில் ஒன்றான பாதாமும் சிறந்த ஸ்நாக்ஸ் ஐட்டங்களில் ஒன்று. இதனை தினமும் சாப்பிட்டால், அதில் உடலுக்குத் தேவையான வைட்டமின் ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கிடைக்கும்.



கடுகுக் கீரை 

கடுகுக் கீரையில் வைட்டமின் ஈ சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. அதிலும் இதனை பச்சையாகவோ அல்லது பாதியாக வேக வைத்து சாப்பிட்டால், இதில் உள்ள முழு நன்மைகளையும் பெறலாம்.




சிவப்பு குடைமிளகாய்

 குடைமிளகாயில் சிவப்பு குடைமிளகாயில் வைட்டமின் ஈ, சி மற்றும் மற்ற சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் அடங்கியுள்ளன.



பிஸ்தா 

நட்ஸ் சாப்பிட ரொம் பிடிக்குமா? அப்படியெனில் மறக்காமல் பிஸ்தாவை வாங்கி சாப்பிடுங்கள். அதிலும் உப்பில்லாத வறுத்த பிஸ்தாவை சாப்பிடுவது சிறந்தது.






மிளகாய் தூள் 

மசாலா பொருட்களில் ஒன்றான மிளகாய் தூளை உணவில் சேர்த்தால், காரம் மட்டுமின்றி உணவுக்கு ஒரு நல்ல சுவையும் கிடைக்கும். மேலும் இதனை உணவில் சேர்த்தால், வைட்டமின் ஈ மற்றும் இதர ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் உடலுக்கு கிடைக்கும்.




நன்றி : ஒன் இந்தியா







வெள்ளி, 25 ஜனவரி, 2013

ஞாயிறு, 20 ஜனவரி, 2013

கால்சியம் அதிகம் இருக்கும் உணவுகள்

பால் 



பாலில் கால்சியம் அதிகம் நிறைந்திருப்பது அனைவருக்குமே தெரியும். அதிலும் பெண்கள் தினமும் ஒரு டம்ளர் பாலில் புரோட்டீன் பொடியை சேர்த்து குடித்தால், ஒரு நாளுக்கு தேவையான கால்சியம் சத்தை பெறலாம்

தயிர்




பால் பிடிக்காதவர்கள், தயிரை சாப்பிடலாம். தயிரிலும் பாலில் உள்ள கால்சியத்தின் அளவு உள்ளது.

மத்தி மீன் 



மீன்களில் மத்தி மீன் மிகவும் பிரபலமானது, அத்தகைய மீனில் 33 சதவீதம் கால்சியம் சத்தை தருகிறது. எனவே இதனை வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால், நல்லது.

பாலாடைக் கட்டி 

    


பால் பொருட்களில் ஒன்றான சீஸ் பெண்களுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் சீஸிலும் கால்சியம் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது.

உலர் அத்திப்பழம்



அத்திப்பத்தில் இரண்டு வகையான முக்கியமான சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிலும் பெண்களுக்கு தேவையான முக்கியமான சத்துக்கள் உள்ளது. அது கால்சியம் மற்றும் இரும்புச்சத்து. எனவே இதனை தினமும் 2-3 துண்டுகள் சாப்பிட்டு வருவது நல்லது

பச்சை இலைக்காய்கறிகள்




பால் பொருட்களைத் தவிர, கால்சியம் சத்தானது பச்சை இலைக் காய்கறிகளில் நிறைந்துள்ளது. அதிலும் பசலைக் கீரை, ப்ராக்கோலி போன்றவற்றை அளவுக்கு அதிமான அளவில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது
.

பாதாம்




பாதாமில் வைட்டமின் ஈ சத்து மட்டுமின்றி, 70-80 சதவீத கால்சியம் நிறைந்துள்ளது. எனவே தினமும் ஒரு கையளவு பாதாமை சாப்பிட்டு, உடலில் கால்சியத்தை அதிகரியுங்கள்

ஆரஞ்சு



சிட்ரஸ் பழங்களில் ஒன்றான ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மட்டுமின்றி, கால்சியம் சத்தும் அடங்கியுள்ளது
.

ஓட்ஸ்




ஓட்ஸை அதிகம் சாப்பிடுவதால், இதயம் ஆரோக்கியமாக இருப்பதோடு, நார்ச்சத்தும் அதிகம் உள்ளது. அதேசமயம் இதில் சில கால்சியம் சத்தும் உள்ளடங்கியுள்ளது. எனவே பெண்களுக்கு, இது ஒரு சிறந்த காலை உணவாக இருக்கும்
.


இறால்





இறாலில் கால்சியம் அதிகம் உள்ளது. ஆனால் அதை அளவுக்கு அதிகமாக வேக வைத்தால், அதில் உள்ள கால்சியம் போய்விடும். எனவே தீயை குறைவில் வைத்து, அளவுக்கு அதிகமாக வேக வைத்துவிடாமல் சாப்பிட வேண்டும்.

நன்றி:ஒன் இந்தியா