Blogger news

adharva school

வியாழன், 28 ஜூலை, 2011

ஜெனரல் மோட்டார்சில் நானுறு பேருக்கு வேலை



குஜராத் மாநிலம்ஹலோலில் உள்ள கார் தொழிற்சாலையில் புதிதாக 400 தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த ஜெனரல் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் குஜராத் மாநிலம்ஹலோல் மற்றும் மஹாராஷ்டிராவிலுள்ள தலேகான் ஆகிய இடங்களி்ல் தொழிற்சாலை அமைத்து கார் உற்பத்தி செய்து வருகிறது.ரூ.2,200 கோடி முதலீட்டில் இந்த இரண்டு தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யும் முயற்சிகளை அந்த நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. 


அடுத்த ஆண்டுக்குள் இந்த விரிவாக்க பணிகளை முடிக்கவும் ஜிஎம் திட்டமிட்டுள்ளது.ஹலோலில் உள்ள கார் தொழிற்சாலைக்கு புதிதாக 400 தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தவும் அந்த நிறுவனம் திட்டமி்ட்டுள்ளது. 

தவிரஅடுத்த ஆண்டு விரிவாக்க பணிகள் முடியும்போது மொத்தமாக 1,000 தொழிலாளர்களை நியமிக்கவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து ஜெனரல் மோட்டார்ஸ் தலைவர் கார்ல் சிலிம் கூறியதாவது:
அடுத்த ஆண்டு புதிய மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளோம். எனவேஉற்பத்தியை அதிகரிக்கும் வகையில் விரிவாக்கப்பணிகளை மேற்கொண்டுள்ளோம்.ஹலோல் தொழிற்சாலையில் பல்வேறு பிரிவுகளில் புதிதாக 400 பேரை நியமிக்க உள்ளோம். இதில்பெரும்பாலான தொழிலாளர்கள் கார் உற்பத்தி பிரிவில் பணிக்கு அமர்த்தப்படுவர். மேலும்அடுத்த ஆண்டுக்குள் புதிதாக 1,000 பேருக்கு வேலை வழங்க இருக்கிறோம்," என்று கூறினார்.



கருத்துகள் இல்லை: