Blogger news

adharva school

வெள்ளி, 29 ஜூலை, 2011

வீடியோ சாட்டிங் கூகுள்டாக் வசதியை கொடுக்கும் சாம்சங் கேலக்ஸி எஸ் ஐ-9000



வீடியோ சாட்டிங் கூகுள்டாக் வசதியை கொடுக்கும் லேட்டஸ்ட் ஆன்ட்ராய்டு ஜிஞ்சர்பிரெட் 2.3.4 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை விரைவில் சாம்சங் கேலக்ஸி எஸ் ஐ-9000 மாடல் போனில் அப்டேட் செய்து கொள்ளலாம்.வீடியோ சாட்டிங் கொண்ட கூகுள்டாக் வசதி மொபைல்போன் துறையில் புதிய மைல்கல்லை எட்டுவதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் போன்களில், அதன் அடுத்தடுத்த புதிய வெர்ஷன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்டேட் செய்து கொள்ள முடியும் என்பதே அதன் கம்பீரம். மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட போன்களில் இந்த வசதி கிடையாது.


இந்த ஒரு ஆயுதத்தை வைத்துக்கொண்டு, மற்ற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை வடிவமைக்கும் நிறுவனங்களுக்கு கூகுள் வித்தை காட்டி வருகிறது. இந்த நிலையில், கூகுள் சமீபத்தில் அறிமுகம் செய்த ஆன்ட்ராய்டு 2.3.3 வெர்ஷனில் சில தொழில்நுட்ப குறைபாடுகள் இருந்தன.இதையடுத்து, குறுகிய காலத்திலேயே அதைவிட மேம்படுத்தப்பட்ட ஆன்ட்ராய்டு 2.3.4 வெர்ஷனை கூகுள் அறிமுகம் செய்து அறிமுகம் செய்துள்ளது. 

ஆன்ட்ராய்டு 2.3.3 வெர்ஷனில் அனுமதி இல்லாமல் தகவல்களை அடுத்தவர் சுட்டுவிடும் ஆபத்து இருந்ததால், இந்த புதிய வெர்ஷனை கூகுள் அறிமுகம் செய்துள்ளது.நடப்பு காலாண்டில் சர்வதேச அளவில் அப்டேட் செய்து கொள்ளும் வசதியை கூகுள் வழங்குகிறது. இந்தியாவில் வரும் நான்காம் காலாண்டில் ஆன்ட்ராய்டு 2.3.4 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை அப்டேட் செய்துகொள்ளலாம்.
ஆன்ட்ராய்டு லேட்டஸ்ட் வெர்ஷனான ஜிஞ்சர்பிரெட் 2.3.4 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை சாம்சங் கேலக்ஸி எஸ் ஐ-9000 வைத்திருப்பவர்கள் விரைவில் அப்டேட் செய்துகொள்ளமுடியும்.மேலும்,இந்தியாவில் ஆன்ட்ராய்டு 2.3.4 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட முதல் போன் சாம்சங் கேலக்ஸி எஸ் ஐ-9000 என்ற பெருமையையும் பெறப்போகிறது.

கருத்துகள் இல்லை: