Blogger news

adharva school

வெள்ளி, 10 ஜூன், 2011

யுரேனஸ் கோள்(Urenus Planet)

யுரேனஸ்(Urenus):
சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து ஏழாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும். 1781 ஆம் ஆண்டு இது கண்டறியப்பட்டதுவிட்டத்தின் அடிப்படையில் இது மூன்றாவது பெரிய கோளாகும். இக்கோள் கிரேக்கக் கடவுள் யுரேனசின் நினைவாக பெயரிடப்பட்டது.இது வியாழன்(Jupiter) மற்றும் சனி (Saturn) போல வாயு கோளாகும்.இதன் வளிமண்டலம் (Atmosphere) ஹைட்ரஜன்,
ஹுலியம், மீத்தேன் போன்ற வாயுகளால் நிரம்பியது.இதற்கும் சனியை போல் வளையங்கள் கொண்டது .இதில் 11 வளையங்கள் உள்ளது.இது சூரியனை சுற்ற எடுத்துக்கொள்ளும் காலம் 84 ஆண்டுகள் ஆகும்.இது தன்னை தானே சுற்ற 17 மணிநேரம்     14 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது.
இதை கண்டறிந்தவர் வில்லியம் ஹீர்சல் ஆவார்.இதை மார்ச் 13 ,1781 இல்   கண்டுபிடித்தார்.இதற்கு 27   நிலவுகள் இதுவரை  கண்டறியப்பட்டு உள்ளது.  மிராண்டா, ஏரியல், அம்ப்ரியேல், டைட்டானியா ஆகியவை ஐந்து பெரிய நிலவுகளாகும். இது  நீல நிற மேகங்களால் சூழப்பட்டுள்ளது. இம் மேகங்கள் மீத்தேனால் ஆனவை ஆகும்.இதில் உக்கிரமான புயல்கள் தரை பகுதியில் விசுகிறது இங்கு காற்றின் வேகம் மணிக்கு 160 மைல்கள்.இது எதனால் என்று ஆராய்ந்து வருகிறார்கள் நம் அறிவியலர்கள்.
1962 ஆம் ஆண்டில் நாசாவின் வாயேஜர் 2 யுரேனசை அடைந்தது அபொழுது அது அனுப்பிய அரிய  புகைப்படங்கள் இக்கோளைப் புரிந்து கொள்ள மிகவும்  உதவியுள்ளன.

மேலும் சில தகவல்கள்:
சராசரி ஆரம் = 2,870,972,200 km
சுற்றுக்காலம்=84y 3d 15.66h
பூமியைச்சார்ந்த சுற்றுக்காலம்(Synodic Period)=369.7 days
சராசரிச் சுற்றுவேகம்=6.8352 km/s
சாய்வு=0.76986°
உபகோள்களின் எண்ணிக்கை=27


யுரேனஸ் புகைப்படங்கள்







யுரேனஸ் பற்றிய வீடியோ தொகுப்புகள்:







கருத்துகள் இல்லை: