Blogger news

adharva school

புதன், 2 டிசம்பர், 2009

புதன் கோள்( mercury planet)



சுற்றுப்பாதைசார்ந்த இயல்புகள்
சூரியனிலிருந்து சராசரித் தூரம் 0.387AU
Mean ஆரை 57,910,000 கிமீ
வட்டவிலகல் 0.20563069
சுற்றுக்காலம் 87நா 23.3ம
பூமியைச்சார்ந்த சுற்றுக்காலம்
(Synodic Period) 115.88 நாட்கள்
சராசரிச் சுற்றுவேகம் 47.8725 கிமீ/செக்
சாய்வு 7.004°
உபகோள்களின் எண்ணிக்கை 0

பௌதீக இயல்புகள்
மையக்கோட்டு விட்டம் 4879.4 கிமீ
மேற்பரப்பளவு 7.5 × 107 கிமீ2
திணிவு 3.302×1023 கிகி
Mean அடர்த்தி 5.43 கி/சமீ3
மேற்பரப்பு ஈர்ப்பு 2.78 மீ/செக்2
சுழற்சிக் காலம் 58நா 15.5088ம
தப்பும்வேகம் 4.25 கிமீ/செக்
சராசரி மேற்பரப்பு வெ.நிலை: நாள் 623 K
சராசரி மேற்பரப்பு வெ.நிலை: இரவு 103 K
மேற்பரப்பு வெப்பநிலை:
தாழ் இடை உயர்
90 K 440 K 700 K
வளிமண்டல இயல்புகள்
வளியமுக்கம் trace
பொட்டாசியம் 31.7%
சோடியம் 24.9%
அணு ஒட்சிசன் 9.5%
ஆர்கன் 7.0%
ஹீலியம் 5.9%
மூலக்கூற்று ஒட்சிசன் 5.6%
நைதரசன் 5.2%
காபனீரொட்சைட்டு 3.6%
நீர் 3.4%
ஐதரசன் 3.2%

புதன் கோள் சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோளாகும். மேலும் இது சூரியக் குடும்பத்தில் மிகச்சிறிய கோளாகும். இது ஒரு முறை சூரியனைச் சுற்றி வர 88 நாள்கள் எடுத்துக்கொள்கிறது.
சூரியனிடமிருந்து புதனின் கோணப்பிரிகை(angular separation from the sun) குறைவாக (அதிகபட்சமாகவே 28.3oதான்) உள்ளதால், பெரும்பாலும் சூரியனின் பொலிவு காரணமாக புதனை காண்பது அரிது.காலை அல்லது மாலை கருக்கல் நேரமே புதனைக் காண்பதற்கு சரியான தருணம்.
தோற்றத்தில் கிட்டத்தட்ட பூமியின் நிலவை ஒத்தது புதன். இது வெட்டவெளியுடன் கூடிய பல பெரும்பள்ளங்களைக்(craters) கொண்டு விளங்குகிறது. புவிநிலவைப் போலவே புதனும் வளிமண்டலம் அற்று உள்ளது. புதனுக்கு நிலவுகள் கிடையாது. ஆனால், புவிநிலவைப் போலன்றி, புதனுக்கு இரும்பாலான பெரிய உள்ளகம் உள்ளது. இதன் காரணமாக ஓரளவு காந்தப்புலமும் புதனுக்கு உண்டு. இதன் புறப்பரப்பு வெப்பநிலையின் நெடுக்கம் (range) −183 °C முதல் 427 °C வரை உள்ளது.
புதனைப்பற்றி அவ்வளவாக அறியப்படவில்லை என்றே கூற வேண்டும். புதனை நெருங்கிய இரண்டு விண்கலங்களில் முதலாவது மாரினர் 10 (Mariner 10). இது 1974-1975 காலகட்டத்தில் புதனை நெருங்கி அதன் புறப்பரப்பில் 45% வரை படமெடுத்தது (mapped). இரண்டாவதாக அனுப்பப்பட்ட மெசஞ்சர் 2008 சனவரியில் புதனருகில் பறந்த போது மேலும் 30% படமெடுத்தது. இது மீண்டும் 2009ல் புதனை நெருங்கும். அதன்பின் 2011ல் சுற்றுப்பாதையில் புகுத்தப்பட்டு (Orbital insertion) புதனின் துணைக்கோளாக மாறியதும் முழுமையான கண்டறிதலை செய்யும்.

கருத்துகள் இல்லை: