Blogger news

adharva school

புதன், 7 அக்டோபர், 2009

சூரியன்


சூரியன் மஞ்சள் குறுமீன் வகையைச் சார்ந்த, சூரிய மண்டலத்தின் மையத்தில் உள்ள, சூரிய மண்டலத்தின் ஆதாரமான விண்மீன் ஆகும். பூமி உள்பட பல கோள்களும், கோடிக்கணக்கான விண்கற்களும், வால்வெள்ளிகளும், அண்டத்தூசி ஆகியனவும் பல்வேறு கோளப் பாதைகளில் சூரியனைச் சுற்றி
வருகின்றன.சூரியனின் எடை மட்டுமே சூரிய மண்டலத்தின் நிறையில் 98.6 சதவிகிதத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது . சூரியனுக்கும் பூமிக்கும் இடையே உள்ள சராசரி தொலைவு தோராயமாக 149 ,600 ,000 கிலோமீட்டர்கள். ஒளி இத்தொலைவை சுமார் 8 நிமிடங்கள், 19 வினாடிகளில் கடக்கிறது. புவியில் உயிர்கள் வாழ்வதற்கு வாழ்வாதாரம் சூரிய ஆற்றலே. ஒளிச்சேர்க்கை மூலம் தாவரங்களில் சேகரிக்கப்படும் சூரிய ஆற்றல் பூமியின் அனைத்து உயிர்களின் ஆதார ஆற்றல் ஆகும். . மேலும் பூமியின் காலநிலை மற்றும் வானிலை ஆகியவையும் சூரியனை சார்ந்தே உள்ளன.
சூரியன் காந்த ஆற்றல் மிகுந்த விண்மீன் என ஆராட்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். சூரிய காந்த புலம் ஒவ்வெரு வருடமும் தன்னிலையில் சிறு மாற்றம் அடைவதுடன், பதினொரு வருடங்களுக்கு ஒருமுறை நேர்மாறாகிறது. சூரிய காந்த புலம், சூரியனில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்துகிறது. இவ்விளைவுகளை கதிரவனுயிர்ப்பு (solar activity ) என்று தமிழில் குறிப்பிடுவர். உதாரணமாக சூரியமரு (sunspot) , சூரிய எரிமலை (solar flare ), சூரிய சூறாவளி (solar winds) ஆகியவை சூரிய காந்த புலத்தில் ஏற்படும் மாற்றங்களால் தோன்றும் கதிரவனுயிர்ப்பு நிகழ்வுகள் ஆகும். சூரிய மண்டல உருவாக்கத்தில் சூரியனில் நடைபெறும் கதிரவனுயிர்ப்பு நிகழ்வுகள் பெரும் பங்காற்றி உள்ளதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். கதிரவனுயிர்ப்பு நிகழ்வுகள் மூலம் புவியின் அயன மண்டலம் வடிவத்தில் மாற்றம் அடைகிறது.
கதிரவன் பெருமளவில் ஐதரசன் (சுமார் 74% நிறை, மற்றும் 92% கனவளவு) மற்றும் ஈலியம் (சுமார் 24% நிறை , 7% கனவளவு) ஆகியவற்றையும், சிறிய அளவில் பிற தனிமங்களான, இரும்பு, நிக்கல், ஆக்சிசன், சிலிக்கன் , கந்தகம் , மக்னீசியம் , கரிமம், நியான் , கல்சியம் , குரோமியம் ஆகியவற்றையும் கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை: