Blogger news

adharva school

ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

நீங்கள் பாத்திராத பாலங்கள் மற்றும் சாலைகள்

நீங்கள் பாத்திராத பாலங்கள் மற்றும் சாலைகள் :

உலகில் பல சாலைகள் மற்றும் பாலங்கள் உள்ளன அதில் சில வித்தியாசமானவை உங்கள் பார்வைக்கு 


Atlantic Road – Norway



Blue Ridge – USA





Guoliang Tunnel – China





Red Rock Scenic Road – USA





 Transfagarasan Road – Romania





சனி, 11 ஆகஸ்ட், 2012

திருப்புமுனை :இந்த பிரச்சனைய படிக்காதீங்க

"நடந்ததையே நினைத்து வருத்தப்படுவதால் எந்த பயனும் இல்லை.அடுத்து நடப்பதை யோசிப்பதே புத்திசாலித்தனம்" 
மேலே உள்ளது எல்லார் வாழ்க்கையிலும் நடப்பதே நடந்ததையே நினைத்து வருத்தப்படுபவர்கள் அதிகம் அவர்கள் வாழ்கையில் முன்னேற வாய்ப்பில்லாமல் போகிறது அடுத்து நடப்பதை யோசிப்பவர்கள் வாழ்கையில் முன்னேறுகிறார்கள் அதற்கு சிறந்த  உதாரணம் பல பேர் அவர்களில் வால்ட் டிஸ்னியும்  ஒருத்தர் அவரின் வாழ்வில் நடந்த திருப்பு முனை பற்றி காண்போம்.


வால்ட் டிஸ்னி ஓர் ஓவியர்."ஆஸ்வால்ட் "என்ற பெயரில் முயல் கதாபத்திரம் ஒன்றை உருவாக்கி அனிமேஷன் படங்களை தயாரித்து புகழ் பெற்றார் நல்ல சம்பாரித்தார் மற்றவர்கள் தந்திரமாக சூழ்ச்சி செய்து அவருடைய ஆஸ்வால்ட் கதாபத்திரத்தை அவரிடம் இருந்து பறித்து விட்டனர்.அதுமட்டும் இல்லாமல் அவரிடம் பணிபுரிந்த ஓவியர்கள் அனிமேஷன் நிபுணர்கள் இப்போது அவர்கள்  பக்கம்.   

வெகுநேரம் புலம்பிய வால்ட்  டிஸ்னி  கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தார் "நடந்ததையே நினைத்து வருத்தப்படுவதால் எந்த பயனும் இல்லை.அடுத்து நடப்பதை யோசிப்பதே புத்திசாலித்தனம்" 'அவர்கள் என் படைப்பை பறித்து விடலாம் ஆனால் என் கற்பனைகளை எதுவும் செய்ய முடியாது  ஆஸ்வால்ட் பதிலாக அதை போலவே வேறொரு இன்னொரு வெற்றிகரமான கதாபத்திரத்தை உருவாக்குவேன்"என்று உறுதியாக நினைத்தார்.புதிய அனிமேஷன் கதாபாத்திரங்களை நினைத்து கடைசியாக   அவரின் செல்ல பிராணி ஒரு எலி "மார்டிமெர் " அதை மனதில் நினைத்து அதை வரைந்து அதற்கு மனிதரை போல் பான்ட்,சட்டை எல்லாம் போட்டு அசத்தலாக வரைந்தார்.

அதை தன் மனைவியிடம்(லில்லியன்) காண்பித்தும் அவர் வாவ் என்று துள்ளி குதித்தார். கதாபாத்திரத்தின்   பெயர் என்ன என்று கேட்டார்  லில்லியன் "மார்டிமெர்" என்று சொன்னார் வால்ட்  டிஸ்னி.அதற்கு  லில்லியன் "பெயர் நீளமா உள்ளது வேற பேர் வைப்போம்"னு சொன்னார்."சரி ஒரு நல்ல பேர நீயே சொல்லு"னு சொன்னார் டிஸ்னி அதற்கு அவர் மக்கள் மனசுல எப்பொதும் நிக்கணும் அதனால் "மிக்கி " னு ஒரு பேர சொன்னங்க அந்த மிக்கிதான் இப்ப உலகத்தையே  கலக்கிய "மிக்கி மௌஸ்" கதாபத்திரம்.
சந்தர்ப்ப சூழ்நிலையோ பெரிய பிரச்சனையோ வரும்போதுதான் நமக்குள்ள இருக்குற அலாதியான பல திமைகள வெளிபடுத்துது. நடந்ததையே நினைத்து வருத்தப்படுவதால் எந்த பயனும் இல்லை.அடுத்து நடப்பதை யோசிப்பதே புத்திசாலித்தனம் நண்பர்களே.    
நன்றி:படங்கள் கூகிள்    

நான் படித்த, ரசித்த நகைச்சுவை

நான் படித்த, ரசித்த நகைச்சுவை :



ஒருவர் காவல் நிலையத்தைத் தேடிப்  போனார்.
"சார்! நான் அறுபதாம் கல்யாணம் பண்ணிக்க போறேன் எனக்கு போலீஸ் பாதுகாப்பு வேணும்!"
"இதுக்கு எதுக்கு பாதுகாப்பு ? உங்களுக்கு யாராலே ஆபத்து வரபோகுது?"
"நான் கட்டிகிட்ட 59 பேரால ஆபத்து வரலாம்!"  இதான்  அந்த நகைசுவை.
நீங்களா இருந்த அவர என்ன பண்ணு வீங்க?