Blogger news

adharva school

செவ்வாய், 20 செப்டம்பர், 2011

இன்று முதல் களைகட்டும் அரசு கேபிள் டிவி

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் இணைப்பு பெற்றுள்ள அனைவரும் இன்று முதல் விஜய் டிவி, போகோ உள்ளிட்ட கட்டணச் சேனல்களைக் காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

கேபிள் டிவி இணைப்பின் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குவதில் ஏகபோக நிலை ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் பொதுமக்களிடம் இருந்து அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பதைக் கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் நடவடிக்கைகளை புனரமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் மூலம் சென்னை நீங்கலாக ஏனைய 31 மாவட்டங்களிலும் நிறுவப்பட்டுள்ள ஒளிபரப்பு மையங்களை 24 மணி நேரமும் பராமரிக்கவும், ஒளிபரப்பு சேவையை தங்கு தடையின்றி மக்களுக்கு வழங்கவும் தமிழக அரசால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி ஒளிபரப்பின் மூலம் 90 சேனல்கள் ஒளிபரப்பிட நடவடிக்கை எடுக்கப்பட்டன.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ள கேபிள் ஆப்பரேட்டர்கள் மூலம் தொலைக்காட்சி சேவையைப் பெறும் சந்தாதாரர்களிடம் இருந்து மாதம் 70 ரூபாய் மட்டுமே கேபிள் டிவி ஆப்பரேட்டர்களால் வசூலிக்கப்படுகிறது.

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் இந்தச் சேவையை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 2.9.2011 அன்று தொடங்கி வைத்தார். முதலில் இலவச சேனல்களை மட்டும் ஒளிபரப்பும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் பின்னர் கட்டணச் சேனல்களையும் ஒளிபரப்பு செய்யும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இன்று முதல் விஜய் டிவி, ஜீ தமிழ், டிஸ்கவரி தமிழ், போகோ, கார்ட்டூன் நெட்வொர்க், அனிமல் பிளாநெட், நியோ கிரிக்கெட், சோனி மேக்ஸ், ஏஎக்ஸ்என், எச்பீஓ, நேஷனல் ஜியாகிரபிக், என்டிடிவி, சிஎன்என், டைம்ஸ் நவ், ஈஎஸ்பிஎன், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் கிரிக்கெட், டென் கிரிக்கெட், டென் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட பல்வேறு கட்டணச் சேனல்களும் எவ்விதக் கூடுதல் கட்டணமும் இன்றி ஒளிபரப்பப்படும்.

இதன் மூலம் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் இணைந்துள்ள கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் மூலம் இணைப்பு பெற்றுள்ள அனைவரும் இன்று முதல் மாதம் 70 ரூபாய் கட்டணத்திலேயே மேலே குறிப்பிடப்பட்ட கட்டணச் சேனல்களையும் கண்டுகளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால், தமிழகத்தில் பெரும்பான்மையினர் பார்க்கும் சன் டிவி சேனல்கள் குறித்து அதில் எந்தத் தகவலும் இல்லை.


நன்றி:தட்ஸ் தமிழ் 

5 கருத்துகள்:

ஆமினா சொன்னது…

எங்க ஊர்ல இன்னும் கொண்டு வரல இந்த திட்டத்த..........


கொண்டு வந்தாலும் சன்டீவி இல்லாத காரணத்துனால யாரும் ஒத்துக்கமாட்டாங்கன்னே நெனைக்கிறேன் :-)))

Unknown சொன்னது…

ஆமினா கூறியது...
எங்க ஊர்ல இன்னும் கொண்டு வரல இந்த திட்டத்த..........


கொண்டு வந்தாலும் சன்டீவி இல்லாத காரணத்துனால யாரும் ஒத்துக்கமாட்டாங்கன்னே நெனைக்கிறேன் :-)))

ஆனா இங்க சன் dth ல இருந்து லிங்க் மூலமா சன் மற்றும் ktv குடுதங்க அங்க இந்த திட்டத்த செயல் படித்தினா இப்படிதான் பனுவங்க சகோ
கருத்துக்கு நன்றி ஆமினா சகோ

Yaathoramani.blogspot.com சொன்னது…

நல்ல தகவலை ராக்கெட் வேகத்தில்
பதிவின் மூலம் தெரிவித்த ராஜாவுக்கு நன்றி

Unknown சொன்னது…

Ramani கூறியது...
நல்ல தகவலை ராக்கெட் வேகத்தில்
பதிவின் மூலம் தெரிவித்த ராஜாவுக்கு நன்றி

வீட்ல நெட் கொஞ்சம் சரியாய் வேலை செய்ய வில்லை சார் அதான் லேட்டா ரிப்ளை பண்றேன் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ரமணி அய்யா

மாலதி சொன்னது…

ஒரு நேர்த்தியான புள்ளிவிவரம் பாராட்டுகள் தமிழினம் விழிக்க வேண்டும்