Blogger news

adharva school

திங்கள், 26 செப்டம்பர், 2011

தமிழக 'குடி'மக்களால் அரசுக்கு வருமானம் 15,0000௦ கோடி வருமானமாம்


தமிழகத்தில் குடிமக்களின் போதை மயக்கத்தால் அரசுக்கு ரூ.14,965 கோடி அளவுக்கு வருமானம் கிடைத்துள்ளது. இத்தகவல் சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது.
உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை கொள்கை விளக்கக் குறிப்பு செபடம்பர் 8 இல் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் 6,690 சில்லறை மதுபான விற்பனைக் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 3,562 சில்லறை விற்பனைக் கடைகள் நகரங்களிலும், 3,128 கடைகள் கிராமப்புறங்களிலும் அமைக்கப்பட்டுள்ளன.
மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 6,670 மேற்பார்வையாளர்களும், 16, 758 விற்பனையாளர்களும் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.
டாஸ்மாக் நிறுவனத்தின் மூலம் அரசுக்குக் கிடைக்கும் வருவாய் (ஆயத்தீர்வை வருவாய், விற்பனை வரி சேர்த்து) தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கடந்த 1995-96-ம் ஆண்டில் வருவாய் ரூ. 1,425 கோடியாக இருந்தது. இந்த வருவாய் சிறிது சிறிதாக அதிகரித்து கடந்த 2009-2010-ம் ஆண்டில் ரூ. 12,498 கோடியாக உயர்ந்தது. கடந்த நிதியாண்டில் (2010-2011) டாஸ்மாக் வருவாய் ரூ. 14,965 கோடியாக அதிகரித்துள்ளது.
இந்தியத் தயாரிப்பு அயல்நாட்டு மதுவகைகள் கடந்த நிதியாண்டில் 480.46 லட்சம் பெட்டிகளும், பீர் வகைகள் 270.88 லட்சம் பெட்டிகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த அதிமுக ஆட்சியில்தான் தமிழகத்தில் மதுக் கடைகள் அனைத்தையும் அரசே ஏற்று டாஸ்மாக் மூலம் நடத்த ஆரம்பித்தது. அப்போது முதல் மது விற்பனையில் தமிழகம் வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி:தமிழ் இந்தியா

8 கருத்துகள்:

Yaathoramani.blogspot.com சொன்னது…

அவ்வை குடி உயரக் கோன் உயரும் என்றார்
ஒருவேளை இதைத்தான் சொல்லி இருப்பாரோ
என எண்ணத் தோன்றுகிறது என்ன செய்வது ?
எல்லாம் காலத்தின் கோலம்
நல்லவேளை முன்புபோல் பணக்கார ரவுடிகளிடம்
போய்ச் சேராமல் பணம் அரசுக்காவது சேருகிறதே
சிந்திக்கத் தூண்டிச் செல்லும் பதிவு

சென்னை பித்தன் சொன்னது…

பொன் முட்டையிடும் வாத்து!

SURYAJEEVA சொன்னது…

உங்கள் பாக்கெட்டில் பிக்பொக்கெட் அடித்து உங்களுக்கே பயணச் செலவுக்கு பரிதாபப்பட்டு காசு கொடுப்பது எப்படியோ, அப்படியே இந்த முயற்சியும்...

மாலதி சொன்னது…

ஒரு நேர்த்தியான புள்ளிவிவரம் பாராட்டுகள் தமிழினம் விழிக்க வேண்டும்

Unknown சொன்னது…

// Ramani கூறியது...
அவ்வை குடி உயரக் கோன் உயரும் என்றார்
ஒருவேளை இதைத்தான் சொல்லி இருப்பாரோ
என எண்ணத் தோன்றுகிறது என்ன செய்வது ?
எல்லாம் காலத்தின் கோலம்
நல்லவேளை முன்புபோல் பணக்கார ரவுடிகளிடம்
போய்ச் சேராமல் பணம் அரசுக்காவது சேருகிறதே
சிந்திக்கத் தூண்டிச் செல்லும் பதிவு//


இதும் அரசியல் வாதிகல்ட தான் போய் சேரும் .வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி ரமணி சார்

Unknown சொன்னது…

சென்னை பித்தன் கூறியது...
பொன் முட்டையிடும் வாத்து!

சரியா சொன்னிங்க சார்

Unknown சொன்னது…

//suryajeeva கூறியது...
உங்கள் பாக்கெட்டில் பிக்பொக்கெட் அடித்து உங்களுக்கே பயணச் செலவுக்கு பரிதாபப்பட்டு காசு கொடுப்பது எப்படியோ, அப்படியே இந்த முயற்சியும்...//

ஆமா சார் சரியாய் சொன்னிங்க

Unknown சொன்னது…

//மாலதி கூறியது...
ஒரு நேர்த்தியான புள்ளிவிவரம் பாராட்டுகள் தமிழினம் விழிக்க வேண்டும்//

வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி மாலதி மிஸ்