Blogger news

adharva school

புதன், 15 ஜூன், 2011

2012 இல் உலகம் அழியும்?

2012 இல் உலகம் அழியும் ஆமா நீங்க படிச்சது சரிதான் எதாவது வழியில் அல்லது எதாவது விதத்தில் உலகின் அதிக படியான மனித உயிரினம் அழியும்.அதனால எதையும் திட்ட மிடாதிர் கிடைக்கிற நேரத்தை நல்ல என்ஜாய் பண்ணுங்க அடுத்தவருடம் உலகம் அழியும்.

இதாங்க இப்ப பேச்சே இதைத்தான் ஆங்கிலத்தில் டூம்ஸ்டே என்பர்.ஏன் 2012 மட்டும் சொல்கிறார்கள்? ஏன் எனில் மாயன் காலன்டர் டிசம்பர் 21 ,2012 வரை மட்டுமே உள்ளது.இதுவரை நடந்தது எல்லாமே மாயன் காலேண்டேரில் குறிபிடப்பட்டுள்ளது என்பதால் பெரும்பாலனோர் நம்புகிறார்கள் planet X அல்லது Nibiru  பூமியின் மீது மோதும் என்பதும் ஒரு நம்பிக்கையாக உள்ளது.
இப்படி நம்புகிறவர்களுக்கு ஒரு கெட செய்தி என்னவெனில் உலகம் 2012 இல் அழிவதில்லை .ஏனெனில்...
MAYAN காலேண்டர் :
இந்த கலேண்டேரை வடிவமைத்தவர்கள் மாயன் கி.பி 250 -900 காலத்தை சேர்ந்தவர்கள்.மாயன்களின் ஆட்சி மெக்ஸிகோவின் தென்மாநிலத்தில் ஆரம்பித்து Guatemala, Belize, El Salvador and some of Honduras. வரை பரந்து விரிந்த பகுதியாகும், இங்குள்ள மக்கள் நல்ல எழுதும் திறமையும் கட்டிட கலையில் பல நகரங்களையும் உருவாகியுள்ளனர் என்பதற்கான சான்றுகள் உள்ளன.மத்திய அமெரிக்கன் கலாச்சாரத்தில் மாயன் மக்களுக்கு ஒரு ஈர்ப்பு இருந்தது.இந்த பண்பாடு உள்ள மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.இந்த பழமையான பண்பாட்டை இன்றும் பின்பற்றுகிறார்கள் ஆச்சரியமான உண்மை ஆகும்.
 மாயன்கள் பல காலேண்டர்களை உபயோக படுத்தினர்.இந்த காலண்டர்கள் சமுகம்,விவசாயம்,வியாபாரம் மற்றும் நிர்வகரிதியான வேலைகளுக்கு பயன்படுத்தினர்.Tzolk’இன் காலேண்டர் மற்றும் Haab’ இணைத்து உருவாக்கப்பட்டதுதான் இந்த காலேண்டர்.இதில் 365 நாட்களை கொண்டது.52 வருடங்களில் 18980 நாட்களை கொண்டதாக உள்ளது.
அதுமட்டும் அல்லாது வெள்ளி கிரகத்தின் நகர்தலை வைத்தும் காலேண்டர்களை உருவாக்கி உள்ளனர்.அதேபோல் மற்ற கிரகங்களையும் வைத்து காலேண்டர்களை உருவாக்கிஇருக்கலாம்.
மாயன் எண்ணிக்கை “0.0.0.0.0″ ஆரம்பிகிறது. 0 குறிப்பது 0-19  நாட்களை.உதரணத்திற்கு முதல் நாள்  0.0.0.0.1 என வைத்துக்கொண்டால் 19 வது நாள் 0.0.0.0.19 என எழுதலாம்.  அதே 20 வது நாள் 0.0.0.1.0 என எழுதவேண்டும்.0.0.1.0.0 (ஒரு வருடம்) 0.1.0.0.0 (20 ஆண்டுகள்) மற்றும் 1.0.0.0.0 வருடங்களைக் குறிக்கிறது.
2.10.12.7.1 என ஒன்றை எடுத்துக் கொண்டால் அது 1012 ஆண்டுகள்,7 மாதங்கள் மற்றும் 1 நாள் ஆகும்.
இதுக்கும் டூம்ஸ்டே கும் என்னட சம்பந்தம் என்பது நீங்க கேக்கறது புரியுது. மாயன் காலண்டேரில் உள்ள லாங் கவுன்ட் ( Long Count ) வைத்து உலகம் அழியும் என சொல்லபடுகிறது.ஆனால் மாயன் 13 மற்றும் 20 எண்களின் கனாலவுகளின் அடிப்படையில் அமைக்கப் பட்டது .இதில் கடைசி நாள் என்பது 13.0.0.0.0. ஆகும் இது 5126 வருடங்களைக் குறிக்கிறது.இதன் பிறகு மீண்டும்  0.0.0.0.0 ஆரம்பிக்கும்.இதன் படி மாயன் லாங் கவுன்ட் ( Long Count ) டிசம்பர் 21 ,2012 அன்று முடிகிறது. மீண்டும்  “0.0.0.0.0″ ஆரம்பிக்கவேண்டும்.இதே மாயனின்  20.0.0.0.0 வைத்து லாங் கவுன்ட் ( Long Count ) வைத்திருந்தால் 8000   வருடங்களைக் குறிக்கிறது. அதனால் பயப்பட வேணாம் இன்னும் 2874 வருடங்கள் உள்ளது. 

2 கருத்துகள்: