Blogger news

adharva school

செவ்வாய், 29 மார்ச், 2011

வியாழன் (Jupiter)




வியாழன் (Jupiter) சூரியனிலிருந்து ஐந்தாவதாக அமைந்துள்ள ஒரு கோள் அகும். மேலும் இது சூரிய மண்டலத்திலேயே மிகப் பெரிய கோள் ஆகும். வளி அரக்ககோள்கள் நான்கில் வியாழனும் ஒன்றாகும்.வியாழன் கோளின் நிறை 1.9 x 10*27 கி.கி 
வியாழன் சூரியனைப் போல் வாயுக்கள் திரண்ட கோளம். சூடான பாறையும், திரவ உலோகம் சிறிதளவு உட்கரு கொண்டிருந்தாலும், மேல் தளத்தில் திரட்சியான திடப் பொருள் எதுவும் வியாழனில் கிடையாது. பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரமாகும் போது,
மிகப்பெரிய வடிவம் கொண்ட வியாழன் 9 மணி 50 நிமிட நேரத்தில், அதாவது வினாடிக்கு 8 மைல் வேகத்தில் வெகு விரைவாகத் தன்னைத் தானே சுற்றி விடுகிறது.
சூரிய சுற்றுப்பாதையில் சுமார் 484 மில்லியன் மைல் தூரத்தில், சூரியனைச் சுமார் 12 பூகோள ஆண்டுகளுக்கு ஒருமுறை வியாழன் சுற்றி வருகிறது. சூரிய ஒளியை எதிரொளிக்கும் திறமையில், பூமியின் நிலவு, வெள்ளி இவற்றுக்கு அடுத்தபடி்யாக வியாழக் கோள் கருதப் படுகிறது. பூமியிலிருந்து சுமார் 97 மில்லியன் மைல் தொலைவில் சூரியனைச் சுற்றும் வியாழன், பூமியின் விட்டத்தைப் போல் 11 மடங்கு விட்டத்தைக் கொண்டது. வியாழனின் நிறை பூமியைப் போல் சுமார் 318 மடங்கு அதிகமானது. புவியீர்ப்பு விசையைப் போல் 2.5 மடங்கு ஈர்ப்பு விசை பெற்றது, வியாழன்.
இந்த வளியரக்கனின் நடுவரை விட்டம்  சுமார் 88,700 மைல். சற்று சப்பையான துருவ விட்டம்  சுமார் 83,000 மைல். வாயுக் கோளமான வியாழன், மிகக் குன்றிய நேரத்தில் (9 மணி 50 நிமிடம்) தன்னைத் தானே வெகு வேகமாய்ச் சுற்று்வதால் தான் துருவங்கள் சற்றுத் தட்டையாய் உள்ளன. சூரிய மண்டலத்தின் பாதிப் பளுவை வியாழன் தன்னகத்தே ஆக்கிரமித்துக் கொண்டு, சிறுகோள்கள் , வால் விண்மீன்கள் போன்ற வான் பொருள்களைத் தனது அபார ஈர்ப்பு விசையால் இழுத்து அடிமையாக்கிக் கொண்டு, தன்னைச் சுற்றும்படி அவற்றைக் கட்டுப்படுத்துகிறது.
ஹைட்ரஜன் வாயுவால் முதன்மையாகவும் மேலும் ஹீலியத்தாலும் நிரப்பப்பட்டுள்ள வியாழன், இவ்வளிமங்களின் கடும் அழுத்ததால் அழுத்தப்பட்ட நிலையில் சில தனிமப்பாறைகளாலான உள்ளகமும்(center core) கொண்டது. வியாழனின் புற வளிமண்டலம், அதன் வெவ்வேறு குறுக்குக்கோடுகளில் பலவிதமான வளிமப்பட்டைகளால் நிரம்பியுள்ளதால் கடும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதன் விளைவாகவே, வியாழனின் மிகப்பிரபலமான பெருஞ்சிவப்புப் பிரதேசம்(GREAT RED SPOT) உருவானது.


 இந்த பெருஞ்சிவப்புப் பிரதேசம் என்ற மாபெரும் புயல் கிட்டத்தட்ட 17 ஆம் நூற்றாண்டில் தொடங்கி இன்றளவும் வீசி வருகின்றது. வியாழனைச் சுற்றியும் ஒரு மெல்லிய வளையத்தொகுதி உள்ளது. தவிர, மிகவும் வலிமையான காந்தப்புல மண்டலம் உள்ளது. கலீலியோவால் 1610ல் கண்டுபிடிக்கப்பட்ட நான்கு பெரிய கலீலிய நிலவுகளுடன் சேர்ந்து மொத்தம் 63 நிலவுகள் வியாழனுக்கு உள்ளன. சூரிய மண்டலத்திலேயே மிகப் பெரிய நிலவான கானிமீடு புதன் கோளை விடவும் பெரியது.



சுற்றுப்பாதைசிறப்பியல்புகள்:


சூரியனிலிருந்து சராசரித் தூரம் 5.20336301 AU
அரைப்பேரச்சு 778,412,010 கிமீ
வட்டவிலகல் 0.04839266
சுற்றுக்காலம் 11வ 315நா 1.1ம
பூமியைச்சார்ந்த சுற்றுக்காலம்
398.9 நாட்கள்
சராசரி சுற்று வேகம் 13.0697 கிமீ/செக்
சரிவு 1.30530°
உபகோள்களின் எண்ணிக்கை 63


புறநிலை சிறப்பியல்புகள்:


மையக்கோட்டு விட்டம் 142,984 கிமீ
மேற்பரப்பளவு 6.41×1010 கிமீ2
நிறை 1.899×1027 கிகி
சராசரி அடர்த்தி 1.33 கி/சமீ3
மேற்பரப்பு [ஈர்ப்பு]] 23.12 மீ/செக்2
சுழற்சிக் காலம் 9ம 55.5நி
அச்சுச் சாய்வு 3.12°
எதிரொளிப்புத் திறன் 0.52
விடுபடு வேகம்(escape velocity) 59.54 
கிமீ/

செக்






மேற்பரப்பு வெ.நிலை:

தாழ் இடை உயர்
110கெ 152 கெ  கெ

வளிமண்டல இயல்புகள்:

வளியழுத்தம் 70 kPa
ஐதரசன் >81%
ஹீலியம் >17%
மீதேன் 0.1%
நீர் ஆவி 0.1%
அமோனியா 0.02%
எதேன் 0.0002%
பொஸ்பைன் 0.0001%
ஐதரசன் சல்பைட்டு <0.0001%