Blogger news

adharva school

திங்கள், 25 ஜூலை, 2011

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஒரு நடிகரை இணை வைத்த நடிகையால் பரபரப்பு


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு இணையானவர் சல்மான்கான் என்று கரீனா கபூர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. சல்மானே இதை மறுத்துவிட்டார்.

பாடிகார்ட் படத்தில் சல்மான்கானுடன் நடிக்கும் கரீனா கபூர் கூறுகையில், “இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இணை யாருமில்லை. அவர் ஒரு பிறவி நடிகர். அவர் என்ன செய்தாலும் அது புதிய trend . அவரைப் போல மக்கள் மனம் கவர்ந்தவர், ஈர்ப்பு மிக்கவர் யாருமில்லை. என்னைப் பொருத்தவரை பாலிவுட்டின் ரஜினிகாந்த் என்றால் அது சல்மான்கான்தான்” என்று கூறியிருந்தார். கரீனாவின் இந்த பேச்சு பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் இதனை மறுத்துள்ளார் சல்மான்கான். ‘‘இந்திய சினிமாவில் ரஜினிக்குள்ள இடம் தனி. இங்கு எனக்கென ஒரு இடம் உள்ளது. எனக்கான இடத்தை நான் மகிழ்ச்சியுடன் ஏற்கிறேன். ரஜினியுடன் யாரையும் ஒப்பிட வேண்டாம் ” என்று சல்மான்கான் கூறினார்.

கருத்துகள் இல்லை: