Blogger news

adharva school

செவ்வாய், 26 ஜூலை, 2011

ரூ.1,499 இல் கம்பெனி மொபைல் அருமையான தொழில்நுட்பத்துடன்






ரூ.1,499 மற்றும் ரூ.1,799 விலைகளில் இரண்டு மலிவு விலை போன்களை பீட்டெல் பிராண்டில் பார்தி என்டர்பிரைசஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.


பார்தி என்டர்பிரைசஸ், ஏர்டெல் பிராண்டில் தொலைதொடர்பு சேவையையும், பீட்டெல் பிராண்டில் மொபைல்போன்களை தயாரித்து வழங்கி வருகிறது.

அடித்தட்டு மக்களின் வசதிக்கேற்ப நவீன அம்சங்கள் நிறைந்த போன்களை இந்த நிறுவனம் தொடர்ந்து அறி்முகப்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், பீட்டெல் ஜிடி-310 மற்றும் ஜிடி-218 என்ற பெயரில் இரண்டு மலிவு விலை போன்களை பார்தி என்டர்பிரைசஸ் நிறுவனம் நேற்று அறிமுகம் செய்துள்ளது. இதில், பீட்டெல் ஜிடி-310 மாடல் ரூ.1,799 விலையிலும், ஜிடி-218 மாடல் ரூ.1,499 விலையிலும் விற்பனைக்கு வந்துள்ளது.
இதில், ஜிடி-310 போன் டியூவல் சிம் வசதிகொண்டது. 1,200 எம்ஏஎச் பேட்டரியையும் கொண்டுள்ளது. எப்எம் ரேடியோ, ஒன் டச் டார்ச் லைட், விஜிஏ கேமரா, ஆடியோ மற்றும் வீடியோ ரெக்கார்டிங் அம்சங்களையும் கொண்டுள்ளது.

இதேபோன்று, ஜிடி-218 போனும் டியூவல் சிம் வசதிகொண்டதாகவே வந்துள்ளது. இதில், 1,800 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது 25 நாட்கள் ஸ்டான்ட்- பை மோடிலும், 15 மணிநேரம் டாக்டைமையும் கொடு்க்கும் வல்லமை கொண்டது.

 இது 1.8 இஞ்ச் டச் ஸ்கிரீன், எப்எப் ரேடியோ மற்றும் 8 ஜிபி வரை கூடுதல் சேமிப்பு திறனை பெறும் வசதிகளை பெற்றிருக்கிறது.

இரண்டு  மெமரி ஸ்லாட் கொண்ட இதில் 2ஜிபி மற்றும் 8 ஜிபி மெமரி கார்டுகளை பொருத்திக்கொள்ளலாம்.



1 கருத்து:

Mohammed Roshan சொன்னது…

நல்ல தகவல் நன்றி நண்பரே