Blogger news

adharva school

திங்கள், 4 ஏப்ரல், 2011

சனி கிரகம்


   சனி கிரகம் சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து ஆறாவதாக அமைந்துள்ள ஒரு கோள். சூரியக்குடும்பத்தில் இது இரண்டாவது பெரிய கோளாகும்.வளி அரக்கக்கோள்கள் நான்கில் சனியும் ஒன்றாகும்.
இது பாறை மற்றும் பனிக்கட்டியாலான சிறிய உள்ளகமும் (Central Core) அதைச் சுற்றி தடிமனான உலோக ஹைட்ரஜன் அடுக்கும் அதன் மேலாக வளிம அடுக்கும் கொண்டது.சனிக்கோள் ஹைட்ரஜன் வளிமத்தால்
முதன்மையாகவும் ஹீலியம் மற்றும் ஒருசில தனிமங்களால் சிறிய அளவிலும் நிரப்பப்பட்டுள்ளது. சனியில் காற்றின் வேகம் வியாழனை விடவும் அதிகம், அதாவது 1800 கிமீ/மணி வரையிலும் இருக்கக்கூடும்.
சனிக்கோளின் சிறப்பான வளையங்கள், பெரும்பான்மையாக பனித்துகள்களாலும் பாறைத்துகள்கள் மற்றும் தூசிகளாலும் ஆனவை. சனியின் நன்கறிந்த நிலவுகள் மொத்தம் 61.




1 கருத்து:

Roshan சொன்னது…

good information tnks pal