Blogger news

adharva school

சனி, 31 ஆகஸ்ட், 2013

தூங்கும் முன்பு தவிர்க்க வேண்டிய 8 உணவுகள்!!!

தூங்கும் முன்பு தவிர்க்க வேண்டிய 8 உணவுகள்!!!

இறைச்சி 
  • இறைச்சியில் எவ்வளவு தான் புரோட்டீன் மற்றும் இரும்புச்சத்து அதிகம் நிறைந்திருந்தாலும், அது செரிமானமாவதற்கு நிறைய நேரம் ஆகும். 
  • எனவே இறைச்சிகளை இரவு நேரத்தில் உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது.
 
சாக்லெட்
 
  •  இது  இடுப்புக்கு மிகவும் கெடுதலானது. 
  • அதுவும் இரவு நேரத்தில் சாப்பிட்டால், அதில் உள்ள கலோரிகள் கொழுப்புக்களாக சேர்ந்து, தொப்பையை ஏற்படுத்திவிடும். 
  • எனவே சாக்லெட்டை இரவு நேரத்தை தவிர, மற்ற நேரங்களில் சாப்பிடுங்கள். மேலும் இதில் காப்ஃபைன் இருப்பதால், அது இரவில் உடலை புத்துணர்ச்சியடையச் செய்து, தூக்கத்தை கெடுத்துவிடும்.
  •  டார்க் சாக்லெட் மூளை மற்றும் ஞாபக சக்திக்கு மிகவும் சிறந்தது.

காய்கறிகள் 
 
  • வெங்காயம், ப்ராக்கோலி அல்லது முட்டைகோஸ் போன்றவற்றில் கரையாத நார்ச்சத்து நிறைந்திருப்பதால், அது நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருக்கும். 
  • பொதுவாக இத்தகைய உணவுகளை காலை வேளையில் சாப்பிடுவது சிறந்தது. ஆனால் இரவில் செரிமான மண்டலம் மெதுவாக செயல்படுவதால், அது வயிற்று உப்புசம் அல்லது கடுப்பை ஏற்படுத்திவிடும்.
ஆல்கஹால் 
 
  • அனைவரும் ஆல்கஹால் நல்ல தூக்கத்தை தரும் என்று நினைக்கிறோம். சொன்னால் நம்பமாட்டீர்கள், உண்மையில் அது தூக்கத்தை கெடுக்கும் ஒரு பொருள்.
  •  அதிலும் ஒயின் தான் தூக்கத்தைக் கெடுப்பதில் முதன்மையானது. மேலும் அதிக கலோரிகள் நிறைந்ததும் கூட.

சீஸ் பர்கர்
 
  •  மற்ற உணவுகளை விட, சீஸ் பர்கரில் தான் கலோரி அதிகமாக உள்ளது.
  •  மேலும் இதனை சாப்பிட்டால், இது வயிற்றில் ஒருவித அமிலத்தை உற்பத்தி செய்து, இரவில் நெஞ்செரிச்சலை ஏற்படுத்திவிடும்.

பிட்சா 
 
  • உடலுக்கு தீங்கை விளைவிக்கும் உணவுப் பொருட்களில் முதன்மையானது. 
  • மேலும் இதனை சாப்பிட்டால், செரிமான மண்டலத்தின் செயல்பாடானது குறைந்துவிடுவதோடு, பாதிக்கப்படும். அத்தகைய உணவுப் பொருளை இரவில் சாப்பிட்டால், தூக்கம் கெடுவதோடு, நெஞ்செரிச்சலும் அதிகரிக்கும்.

பாஸ்தா 
 
  •  பாஸ்தாவில் கலோரிகள் அதிக அளவில் நிறைந்துள்ளது.
  • ஆனால் இந்த உணவுப் பொருளை இரவில் உண்டால், அதில் உள்ள அதிகப்படியான கார்போஹைட்ரேட், உடல் எடையை அதிகரித்துவிடும்.
  •  மேலும் இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவு கூட அதிக அளவில் உள்ளது. 
  • ஆகவே இந்த உணவுப் பொருளை அறவே தவிர்க்க வேண்டும்
இனிப்புப் பொருட்கள் 


 
  • சிலருக்கு இரவில் இனிப்புப் பொருட்களை சாப்பிடும் பழக்கம் இருக்கும். 
  • ஆனால் அதிக கலோரி உணவுகள் மற்றும் இனிப்புப் பொருட்களை சாப்பிட்டால், அவை மூளை அலைகளில் பாதிப்பை ஏற்படுத்தி, தூக்கமின்மையை ஏற்படுத்திவிடும். 
 
எனவே நல்ல அமைதியான மற்றும் ரிலாக்ஸான தூக்கத்தைப் பெற வேண்டுமெனில், இனிப்புப் பொருட்கள், ஜங்க் உணவுகள் போன்றவற்றை தவிர்த்து, ஓட்ஸ் போன்ற கலோரி குறைவான மற்றும் எளிதில் செரிமானமாகும் உணவுப் பொருட்களை உட்கொள்ளலாம்.

வியாழன், 29 ஆகஸ்ட், 2013

குட்டிக்கதை:

ஒரு ஊரில் ஒரு ஆட்டிறைச்சிக் கடை இருந்தது.
அக்கடையில் முதலாளியே தொழிலாளி.
ஒவ்வொருநாளும், கடையை மூடப்போகும் சமயம், ஒரு திமிர்பிடித்தவன் அக்கடைக்கு வந்து, முதலாளியிடம்,"முதலாளி மூளையிருக்கா?" என்று கேட்பான்.
அதற்கு முதலாளியோ, மூளை இல்லை என்றவுடன், என்ன முதலாளி இன்றும் உங்களிடம் மூளை இல்லையா? என்று கிண்டலுடன் கேட்டுவிட்டு செல்வான்.
இதையே வழக்கமாகக் கொண்டிருந்த அவனை, எப்படியாவது சொற்போரில் தோற்கடிக்கவ...ேண்டும் என்பது அந்த முதலாளியின் நிறைவேறாத ஆசை.
நாட்கள் நகர்ந்தன.
ஒருநாள், அம்முதலாளியின் நன்கு படித்த நண்பன் ஒருவன் அக்கடைக்கு வந்தான். அவனிடம் தன் நிறைவேறாத ஆசை பற்றி முதலாளியும் கூற, "அட இவ்வளவு தானே, நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று நண்பனும் கூறினான்.
கடையை மூடப்போகும் சமயம், அத் திமிர்பிடித்தவன் வந்து, முதலாளியிடம்,
"முதலாளி மூளையிருக்கா?" என்று வழக்கம் போலக் கேட்டான்.
அதற்கு முதலாளியின் நண்பன் அவனைப் பார்த்து,
"இதுவரை வந்த அனைவருக்கும் மூளை இருந்தது, ஆனால் துரதிஷ்டவசமாக உனக்குத்தான் இல்லை" என்றான்.
திமிர்பிடித்தவனின் பேயறைந்த முகத்தைப் பார்த்த, கடை முதலாளியின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி...!!!!!!!!!

புதன், 28 ஆகஸ்ட், 2013

சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய பழங்கள்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்  தைரியமாக  சாப்பிடக்கூடிய பழங்கள்:
 
ஒரு ஆய்வு சொல்கிறது
நீரிழிவு நோயாளிகள், தினமும் 4-5 பழங்களை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம். 
 நீரிழிவு நோயாளிகள் முற்றிலும் சர்க்கரையுள்ள பொருளைத் தவிர்க்கக்கூடாது
தினமும் ஒரு குறிப்பிட்ட அளவில் சர்க்கரையை உடலில் சேர்க்க வேண்டும் , அதிலும் பழங்களில் உள்ள சர்க்கரையை நாள்தோறும் அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறது ஒரு ஆய்வு
இப்போது நீரிழிவு நோயாளிகள் பயமின்றி நிம்மதியாக சாப்பிடக்கூடிய சில பழங்களைப் பார்ப்போம்.
 
பேரிக்காய்
 பேரிக்காயில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.

கொய்யா 
கொய்யாப்பழம் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இது மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கும். அதுமட்டுமின்றி, கொய்யாப்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சில அதிக அளவிலும், கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் நிறைந்துள்ளது.

நாவல் பழம்
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பழம். ஏனெனில் இதனை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு விரைவில் கட்டுப்படும். அதுமட்டுமின்றி, இதன் கொட்டையை பொடி செய்து சாப்பிட்டால், இன்னும் சிறந்த பலனைக் காண முடியும்.
 
ஆப்பிள்
ஆப்பிள் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இது செரிமான மண்டலம், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

அன்னாசி 
அன்னாசிப் பழமும் சர்க்கரை நோயாளிகளுக்கான பழம் தான். இந்த பழத்தில் ஆன்டி-வைரல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருக்கிறது.
 
 
பப்பாளி 
பப்பாளியும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின்கள் மற்றும் மற்ற கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.
 
 
மாதுளை 
மாதுளையும் நீரிழிவு நோயாளிகள் தைரியமாக சாப்பிடக்கூடிய பழங்களுள் ஒன்று. ஏனெனில் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.


நெல்லிக்காய் 
கசப்பு தன்மைக் கொண்ட இந்த நெல்லிக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான பழமாகும். இதில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை தினமும் உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது.