Blogger news

adharva school

புதன், 28 ஆகஸ்ட், 2013

சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடிய பழங்கள்

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள்  தைரியமாக  சாப்பிடக்கூடிய பழங்கள்:
 
ஒரு ஆய்வு சொல்கிறது
நீரிழிவு நோயாளிகள், தினமும் 4-5 பழங்களை சாப்பிடுவதன் மூலம் ஆரோக்கியமாக இருக்கலாம். 
 நீரிழிவு நோயாளிகள் முற்றிலும் சர்க்கரையுள்ள பொருளைத் தவிர்க்கக்கூடாது
தினமும் ஒரு குறிப்பிட்ட அளவில் சர்க்கரையை உடலில் சேர்க்க வேண்டும் , அதிலும் பழங்களில் உள்ள சர்க்கரையை நாள்தோறும் அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறது ஒரு ஆய்வு
இப்போது நீரிழிவு நோயாளிகள் பயமின்றி நிம்மதியாக சாப்பிடக்கூடிய சில பழங்களைப் பார்ப்போம்.
 
பேரிக்காய்
 பேரிக்காயில் வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள உதவும்.

கொய்யா 
கொய்யாப்பழம் நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இது மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கும். அதுமட்டுமின்றி, கொய்யாப்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் சில அதிக அளவிலும், கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாகவும் நிறைந்துள்ளது.

நாவல் பழம்
நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற பழம். ஏனெனில் இதனை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு விரைவில் கட்டுப்படும். அதுமட்டுமின்றி, இதன் கொட்டையை பொடி செய்து சாப்பிட்டால், இன்னும் சிறந்த பலனைக் காண முடியும்.
 
ஆப்பிள்
ஆப்பிள் சாப்பிட்டால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதோடு, இது செரிமான மண்டலம், நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

அன்னாசி 
அன்னாசிப் பழமும் சர்க்கரை நோயாளிகளுக்கான பழம் தான். இந்த பழத்தில் ஆன்டி-வைரல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை அதிகம் இருக்கிறது.
 
 
பப்பாளி 
பப்பாளியும் சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது. ஏனெனில் இதில் வைட்டமின்கள் மற்றும் மற்ற கனிமச்சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன.
 
 
மாதுளை 
மாதுளையும் நீரிழிவு நோயாளிகள் தைரியமாக சாப்பிடக்கூடிய பழங்களுள் ஒன்று. ஏனெனில் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.


நெல்லிக்காய் 
கசப்பு தன்மைக் கொண்ட இந்த நெல்லிக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் சிறப்பான பழமாகும். இதில் வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இதனை தினமும் உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது.


 

செவ்வாய், 27 ஆகஸ்ட், 2013

படித்ததில் பிடித்தது: காமராஜர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி

படித்ததில் பிடித்தது: காமராஜர் வாழ்வில் நடந்த நிகழ்ச்சி :

காமராஜர் அவர்கள் ஒரு முறை சட்டமன்றத்திற்கு செல்லும் பொழுது, மேலே உள்ள அறைக்கு செல்வதற்காக மின் தூக்கியில் (லிப்ட்) ஏறினார், அப்பொழுது அங்கே வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த இளைஞர் கண்ணில் கண்ணீருடன் காமராஜரிடம் மனு ஒன்றை நீட்டினர், மனுவை வாங்கி பையில் வைத்துவிட்டு, அவரிடம் என்னவென்று வினவினார்.


அந்த இளைஞன், "தொழில் துறையில் இருந்து அரசானை ஒன்று வந்திருக்கின்றது, அதில் பத்தாம் வகுப்பிற்கு குறைவாக படித்தவர்கள் இங்கு பணிபுரிய அனுமதில்லை என்று குறிப்பிட்டிருந்தது" என்றான்..

அவனின் வலியறிந்த காமராஜர் சட்டமன்றத்தில் நுழைந்ததும் கூறியது, "ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் அரசாணையை பிறப்பித்தது யார், பொத்தானை அழுத்தினால் மேலே போகிறது, பொத்தானை அழுத்தினால் கீழே வருகிறது, இதற்க்கு எதுக்கு பத்தாவது படிக்க வேண்டும், அவனாவது எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளான், ஆனால் நான் அது கூட படிக்கவில்லையே, அப்படி என்றால் எனக்கு மின் தூக்கியை துடைக்கும் வேலை கூட கிடைக்காதே.." என்றராராம். அரசானை பிறப்பித்தவர் வாயடைத்து நின்றராராம்..

:: "தன்னை இகழ்ந்து, பிறரை உயர்த்திக்காட்டுகிறவனே உயர்ந்து நிற்கிறான் 


நன்றி:

முகப்புத்தகம்
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

அட்டகாசமான புத்தக அலமாரிகள் interior decoration part-3

உங்க புத்தக அலமாரி இப்படி இருந்த எப்படி இருக்கும் அழகாக வடிவமைக்கப்பட்ட புத்தக அலமாரிகள் interior decoration part-3